பொய்யும் நிஜமும்
பொய்யென்றால்
பொய்யல்ல,
நிஜமில்லாதது.
நிஜமென்றால்
நிஜமல்ல,
பொய்யில்லாதது.
'பணக்காரன் நான்'
என்றொரு பொய் சொன்னால்
அது பொய்யல்ல,
நிஜமில்லாதது,
பண ஆசையுடன்..
'ஏழை நான்'
என்றொரு நிஜத்தை சொன்னால்
அது நிஜமல்ல,
பொய்யில்லாதது,
ஏழ்மை தாளாமையில்.
பொய்யை அடையாளம் காண
வேஷம் களையப்பட வேண்டும்.
நிஜத்தை அடையாளம் காண
நிர்வாணம் அறியப்பட வேண்டும்.
இன்று பொய் அதிகம் நிலைப்பதால்
ஒப்பனை ஜோடனையாகி ஆராதனை தூக்கலாகி
இயற்கையை செயற்கை வென்றுள்ளது,
அதனால் நிஜம் உருக்குலைந்து
ஆதி அந்தம் இழந்து அர்த்தம் அவசியம் தொலைந்து
தரித்திரம் சரித்திரம் ஆனது.