மணமகளாய் குணவதி
![](https://eluthu.com/images/loading.gif)
" மணமகளாய் குணவதி "
அனைவருமே அகம்மகிழும் ஆரவார விழாக்கோலம்
அவள் மட்டும் கண்ணீர்பெருக கலங்கியே செல்கின்றாள்...
புதுப்பெண்ணாய் புகும்வீடு செல்லும் அவளுக்கு எதிராய்
புதிர்நிறைந்த வசைவார்த்தைகளை இசைபாடிக்கொண்டே சிலபெண்கள்...
எப்படி எப்படியோ கட்டுக்கதைகளைக் கட்டி அவளை
கட்டையிலிடும்வரை கலங்கவைப்பார்கள் போலும்...
அவரவர் வாழ்வினில் ஆயிரம் தவறுகள் நிகழ்ந்திருக்கும்
அதைமறைத்து அடுத்தவரை குறைகூறுவது என்னநியாயம்...?
கேட்டது புரளியாகவே இருப்பின் அவள் ஏன்
அரளிவிதைதேடி அரவங்காட்டிற்குச் சென்றாள்...? - என்கிறாள் ஒருபெண்
விபரமறியாது வினவாதே வீண்பழி சுமத்ததாதேயென
விளக்கங்களை மறைமுகமாய் தெரிந்துகொள்ள இனக்கமாய் மற்றவளும்கேட்க...
தெள்ளத் தெளிவான கதையொன்றை அள்ளியிரைத்து
மெல்லப்பேசி மெய்யென முலாம்பூசி நின்றாள்...
செவிமடித்துகேட்ட மற்றவளோ அதனைமறுப்பதுபோல் நடித்து
மதியினை தீட்டி மறுமெழி கேட்டிடத் தயாரானாள்...
விடிந்தபின் திருமணம் என அவர்களுக்கும் தெரியும்
மலிவான பழிசொல்கூறி எதை சாதிக்கப் பார்க்கிறார்கள்...?
யாரை குறைசொல்லி என்னவாகிடப் போகிறது
ஒருவேளை இவர்கள் சொல்லவதுகூட உண்மையாக இருந்திருக்கலாம்...
#இப்படியும்_சிலபேர்
#இதற்கு_நானொன்றும்_விதிவிலக்கல்ல