அடையாளங்களற்ற இரவு
நிழல்களின் ஊற்றாகிறது
உயிரின்மையின்
புன்னகை.
உடலின் பட்டுக் கூட்டுக்குள்
பெருமூச்சுக்களாய்
நிமிர்கிறது கனவு.
முகமூடிப் பார்வைகளில்
புதைகிறது
மானுடத்தின் தத்தளிப்பு.
அந்தரத்தில் இமயம் உருக
உடைந்து சொரிகிறது
ஆகாயத்தின் மழை.
பூமியில்....
மரங்களின் சிலிர்ப்பில்
உடைந்து சிதறுகிறது...
பறவையின் நிழல்.
பீதியின் எல்லையில்
கடலாய் விரிகிறது....
காதம்.
பரிமாணங்கள் பிறழ்ந்துவிட...
தன்னிச்சையாய்
அடையாளங்கள் ஏதுமற்றதாகிறது
மானுட இரவு.