காவியங்கள் கண்ட காதல்

காவியங்கள் கண்ட காதல்!
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷?÷÷?

திருவிழா வந்தது ஊரினிலே
திரளாய் வந்தனர்
ஊர் இளசுகளே
காதல் இளம் பருவத்திலே
கருத்து ஒருமித்த
இரு இளசுகளே
கட்டுண்டார் கண பொழுதினிலே!
காவியங்கள் கண்ட காதலிலே!

பூத்து வந்த காதலை
பரிசிக்க காத்திருந்தார்
அந்த நாளும் வந்ததே
அடுத்த திருவிழா நாளிலே!

காதலர் இருவரும் வலி தீர
கண்ணொளி மழுவி தழுவினாரே
சோலையில் சந்திக்க நாள் பார்த்து
ஓதி வைத்தார் ஓர பார்வையிலே !

மஞ்சள் வெயில் பார்த்து
மலர் சோலை சார்ந்து
அன்னக்கிளி
அன்ன நடை மறந்து
அஞ்சும் நடை நடந்தாள்!

எண்ண கிளி
அவள் மனம் துறந்து
அவசரமாய் முன்னே பறந்ததடா!

கன்னத்திலே கனி திரட்சியடா
கன்னி அவள்
கண்களிலோ மானின் மிரட்சியடா!

உதட்டோரத்திலே
ஊறும் பழ சாரத்திலே
உள்ளத்தின் உன்மத்தம் தெரியுதடா!

தூரத்திலே
நதி தீரத்திலே
ஊரகம் தள்ளி அமைந்ததொரு
ஊருணி அடுத்த மலர் சோலையிலே!

சொர்ண கிளி வரவை
பார்த்திருந்தான்
சொக்கன் கிலியுடனே அங்கே
காத்திருந்தான்!

பாவை வரவை சுட்டும்
பாதை பார்வையிலே நீளுதடா
பதை பதைத்து உதைக்கும்
பாழும் மனமோ துள்ளுதடா!

பஞ்ச வர்ண கிளி பக்கம்
நெருங்கிவிட்டாள்
பதைப்பில் இருந்த சொக்கனும்
பார்த்துவிட்டான்!

கொஞ்சும் விழி பார்வையிலே
கெஞ்சும் கைகளை
நீட்டுகின்றான்
தஞ்சம் என்றே தையல்
தரையில் கால் படாது
ஓடுகின்றாள்!

கன்னி அவள் கண்களிலே
கனவுலகம் சுழலுதடா
நிச உலகம். மறைந்தடா

பயந்து வந்த பெண் புறா
பார் வேந்தன் சிபி மடியினிலே
பதுங்கி தெளிந்தது போலே
பாவை சொக்கன் கையினிலே
பசலை நீங்கி தெளிந்தாளே!

பார்த்தன் கை வில் எனவே
வளைந்த சொக்கன் கையினிலே
பறந்து வந்த அலுப்பு தீர
படர்ந்தாள் பாவை.பாசத் தழுவலிலே!

பழமுதிர் சோலையிலே பண்
பாடும் பேடை குயிலே
மழை முகில் முகம் கண்டு
ஆடும் பேகன் மயிலே!

ஊடலில் உழன்று கழன்றவராய்
உவகை முறுவல் கிளைத்தவராய்
வாய்த்த வரம் பலிக்க பெற்றவராய்
வாடா மலரெனவே சிரித்து-மகிழ்ந்தனரே!

முத்து நகை பூண் அன்னக்கிளி
முகிழ் மலர் வாய் கனி பவளத்திலே
முனிவன் சொக்கன் முத்து பதிக்க
முத்து திர்ந்தது கயல்கள். இரண்டிலுமே!

கோடையில் வந்த மழையில்
நனைந்ததோ
குடத்தில் நிறைந்த தேனில்
வீழ்ந்ததோ
கொடை அமிர்தம் நிறை பாற்கடலில்
திளைத்ததோ
சோலைக்குள்ளே குயிலு ஒண்ணு
சும்மா சும்மா பாடுது.!

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (19-Nov-16, 2:37 am)
பார்வை : 171

மேலே