என்னப்பா  நீ வடிக்கும் பா

என்னப்பா  
நீ வடிக்கும் பா!
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

எடுப்பா உடை அணிந்து  
கடுப்பா முகம் கோண  
என்னப்பா நலமா என்றே  
கண்ணப்பா இன்று வந்தார்!  

நட்பா வந்தார் என்றே  
நண்பா வாப்பா என்றேன்  
அமரப்பா என்றேன் சுழிப்பா  
நகரப்பா என அமர்ந்தார்.  

பிடிப்பா விருப்பா பேசாமல்  
தடிப்பா குரல் எழுப்பி  
நெருப்பா வார்த்தை கொட்டி  
வெறுப்பா பார்வை காட்டி  

படிப்பவர் மனதைத் தட்டி  
பிடிப்பா எழுப்பா பா  
என்ன பா என்னப்பா  
நீ வடிக்கும் பா என்றார்!  

அப்பா சற்றே பொறுப்பா  
தப்பா இருப்பின் மன்னிப்பா  
தமிழ் பா மேல் காதலப்பா  
தவிப்பா புனைந்தேன் புதுப்பா  

உதைப்பா மனம் கரிப்பா  
பதைப்பா திகைப்பா ஏற்றப்பா  
சுதைப்பா அறியாமல் மனம்  
சிதைப்பா நான் இருந்தேன்  

எழுத்து தள நண்பர்கள்  
நட்பா நயப்பா சிறப்பா  
விருப்பா தரும் வாழ்த்துப்பா  
கருத்து மனதில் பதியுது அப்பா  
தழைப்பா தமிழ் பா காலத்தில்  
விதைப்பா விளையுது அப்பா  

சொதப்பா இன்றி துடிப்பா  
தொகுப்பா கூட்டும் இனிப்பா  
முனைப்பா இனி புதுப்பா  
படையப்பா நன்றே என்றார்  

தெரிப்பா சுட்டி காட்டியது  
பூரிப்பா இருக்கப்பா என்றே  
பரிப்பா வாழ்த்துப்பா பாடி  
சரிப்பா நடப்பா என்றேன்.  

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (22-Nov-16, 9:08 pm)
பார்வை : 115

மேலே