தேவர் சேனைத் தலைவன்

அறுபடை அழகன் முருகன் கதிர்படை கையோன் வேலோன்
திருமுரு காற்றுப்படை காவிய முதல்வன் நக்கீரன் இறைவன்
வரும்பகை சூரன்தானை வென்ற தேவர் சேனைத் தலைவன்
அருள்வான் வள்ளி தேவானை இருபுறம் அணைத்திடும் மயிலோன் .

-----கவின் சாரலன்

அறுபடை அழகன் --ஆறு படை வீடுகளில் அருளும் அழகன்

சூரன் தானை வென்ற ---தானைத் தலைமை ஏற்று வந்த பகமைச் சூரபதுமனை வென்ற

திருமுருகாற்றுப் படை ----கவி நக்கீரன் முருகன் மீது இயற்றிய ஆற்றுப் படை இலக்கியம் .

ஆற்றுப் படுத்துதல் ------வழிபடுத்துதல்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Nov-16, 6:49 pm)
பார்வை : 73

மேலே