தமிழ் --முஹம்மத் ஸர்பான்

அன்னை மொழியே!
கருவறை வழியே!
தொப்புள் கொடியே!
நிகரற்ற தமிழே!

அழியாத ஓவியம்
அழகான காவியம்
விந்தைகள் நிறைந்த
மொழியின் அரசாட்சி

கம்பன் சுவாசம்
பாரதியின் நெஞ்சம்
பாவேந்தர் ஞானம்
செந்தமிழ் சங்கமம்

தேயாத வெண்ணிலவின்
மூத்தவள் தமிழ் நிலா
வற்றாத பாற்கடலின்
நீர்த்துளிகள் என்னிலா

வள்ளுவன் ஈரடி
ஆன்மீக வைத்தியம்
வானில் தவழ்கையில்
நற்றமிழ் மேகதூதம்

மன்றங்கள் காத்த
முத்தமிழ் மெல்லினம்
தடைகள் வென்ற
வீரத்தமிழ் வல்லினம்

அழகான பூக்கள்
தமிழின் கையெழுத்து
தெவிட்டாத இலக்கியம்
தமிழின் கைரேகை

உள்ளத்தின் உரையாடல்
சுவாசத்தின் உச்சரிப்பு
கவிஞர்கள் பரிமாறும்
விந்தையின் சொற்செறிவு

தாய்ப்பாலில் உதித்த
உயிரெனும் உறவிது
மரணம் வரை
என்னின்பத் தமிழிது

வெற்றி முரசுகள்
முழங்கட்டும் இனிமேல்
வேற்று மொழிகளும்
அடிபணியும் எம் தமிழை

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (23-Nov-16, 8:34 am)
பார்வை : 167

மேலே