மூதறிஞர் ராஜாஜி
காந்திய வழியைக் கடைப்பிடித்தார் கலப்பு திருமணத்தை ஆதரித்தார்
காரிருள் சூழ்ந்திருந்த தாயகத்தில் வரிந்துகட்டிய *கச்சை* வேட்டியுடனே
சுதந்திரப் போரில் இணைந்தார் - மக்கள்
சுகம் பெறவே நாளும் உழைத்தார்
மூவுலகிலும் காணக் கிடைக்காத மூதறிஞர் என்றே புகழப்பெற்றார்
பகுத்தறிவு பகலவன் ஆசான் - தந்தை
பெரியார் அவர்களுக்கு நேசன்
உன்னத உழைப்பை நல்கியே
இத்தியத் திருநாட்டின் மேதகு
உயர் பதவியும் பெற்றார்
மனிதம் நிறைந்த மாமனிதர் -
இராஜாஜி அவர் செயல் திறன்
மகத்துவம் அறிந்தே எந்நாளும்
நினைந்து வாழ்த்திப் போற்றுவோமே!