காற்று குமிழ்கள்

காற்று குமிழ்கள்

படிய வாரிய
சிகையோ..!
கலைத்து விட்ட
சிகையோ..!
கன்னி பார்வை
பட
மெனக்கெட்ட நாட்கள்

பட்ட பெயர்
பலருக்கு வைத்து
காதோடு காதாய்
அழைத்து சந்தோசித்த
நாட்கள்

சிறு சிறு காரணங்கள்
சிறு வயதில்
சிந்தையில் உறுத்த
தூங்காமல்
பொங்கி புழுங்கி
புரண்ட நாட்கள்

பெற்றவர்களை தவிர
மற்றவர்களெல்லாம்
நாயகன் நாயகியாய்
தெரிந்த நாட்கள்

ஓ..! எல்லாமே
திரவ கரைசலில்
கூடி சேர்ந்த
காற்று குமிழ்களோ
பொங்கி நுரைத்து
விரிந்து
வெடித்து கரைசலாய்
மாறிப்போன
நினைவுகள்தானோ ?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (22-Jan-22, 3:07 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : kaatru KUMIZHKAL
பார்வை : 81

மேலே