சேவையே வாழ்க்கை கக்கன்ஜி

சேவையே வாழ்க்கை
*கக்கன்ஜி*

பூமிக்கு வந்த கறுப்பு நிலா.

கண்களிலே காந்தக் கவர்ச்சி கலந்துரையாடலிலே குளிர்ச்சி
காமராசரை ஏற்றதால் மகிழ்ச்சி
கலையாத நன்றி உணர்ச்சி

மாற்றம் வந்தது சிந்தையிலே
பற்றும் மறைந்தது விந்தையிலே
தோற்றம் கவர்ந்தது எளிமையிலே
ஏற்றம் தெரிந்தது வாழ்கையிலே

இல்லாதார் ஏக்கம் தீர்க்க
பாலமாய் வாழ்ந்த சித்தர்
கடையனும் கடை தேற
தொழில்
கல்வி வழங்கிய வித்தகர்

பல துறைகள் ஆளுநர்
பலரும் போற்றும் சேவகர்
நலிந்தவர் எல்லாம் உறவினர்
பொது
நலம் நாடுபவர்க்கே நண்பர்

மன நிறைவில் வேந்தர்
மனிதம் பேணிய புனிதர்
வலிமை மிக்க மந்திரி
வலிகள் நீக்கிய தந்திரி. . . .
அரசியல் ஆதாயம் தேடி
அகப்பட்டு மேன்மை இழந்து குற்றச்சாட்டில் பலர் இருக்க…

பொறை நிறை மனிதர்
‘குறை இல்லா மா மனிதர்’
குணவான் என்றே வரலாற்றுப்

பெட்டகத்தில் பொன் போல்
பொதிந்த பெயர் *கக்கன்ஜி*

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (23-Jan-22, 12:30 pm)
பார்வை : 31

மேலே