காமராஜர் கோபுரமும் குழல் விளக்கும்

*காமராஜர்* கோபுரமும் குழல் விளக்கும்.!!
+×××++++
கடைக் கோடி மனிதனும்
கரை சேர வேண்டியே
கலைகள் பல கற்றிடக்
கல்வி கோவில் கட்டியே

உறுபசி நீங்கி நன்றே
உவந்து கல்வி பயின்றிட
உண்டி அளித்து உதவியே
உயர்ந்து நின்றாய் கோபுரமாய்!.

கோடி புண்ணியம் தந்திடும்
கோபுர தரிசனம் என்றனர்
கோடி வீட்டு குப்புசாமி
குழல் விளக்கு மாட்டினார்

கோபுரத்தை மறந்து விட்டு
குழல் விளக்கைப் பார்த்தனர்!
கோவில் கட்டிய கோமகனைக்
கும்பிட்டு வணங்க மறந்தனர்!

கோபுரம் ஆங்கே இல்லையேல்
குழல் விளக்கு மாட்ட இயலுமோ!

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (23-Jan-22, 12:39 pm)
பார்வை : 42

மேலே