இளைஞனே
இருக்கும் கால்களை
எண்ணிப் பாராமல்
இல்லாச் சிறகுகளுக்காய்
இடிந்து போகிறாய்!
வேர்விடும் திறமைகளுக்கு
வெந்நீர் ஊற்றி
விட்டில்பூச்சியாய்
விளக்கை நோக்குகிறாய்!
கடைவிரித்த வாய்ப்புகளை
கைக்கொள்ளாமல்
தூரத்துப் பச்சைக்காய்
துயரம் போர்த்துகிறாய்!
பொழிந்தால் மழை
கொட்டினால் அருவி
பாய்ந்தால் ஆறு; அதுவே
தேங்கினால் …
கப்பலே கவிழ்ந்தாலும்
கலங்காதே இளைஞனே!
கரங்களாயில்லை உன்னிடம்?
உழைப்பை நீ
துடுப்பாக்கினால் நிச்சயம்
கரையேறுவாய் நாளை!