மகிழ்ச்சி எனக்குப் புதிரல்ல

*மகிழ்ச்சி எனக்குப் புதிரல்ல!*

அருமைப் பெரியோரே வாரும்
-என்
அன்பு அம்மாவிடம் கூறும்
என்பால் அவளின் கருணை
என்றும் ஜீவித பொருநை
என் ஈசன் அளித்த வரமே.

தேற்றம் தருதல் இல்லா
தோற்றமே மிகும் பொருளைத்
தேவை என்றே நினைத்து
தேடிக் கிடைக்காமல் துவண்டு
வாழ்க்கை புதிர் என்பார்
வாலிபம் எட்டிய பருவத்தினர்.

இதயம் என்பது கையளவு
இன்பம் என்பது கொள்ளளவு
எள்ளளவு மிகினும் இகழ்ச்சி
உள்ளத்தின் உயர்வே மகிழ்ச்சி


எப்போதும் இயற்கை உணவு
ஏப்பம் வருமுன் நிறுத்துவேன்
எதையும் அளவாய் ஏற்பேன்
பதைப்பு இல்லை எனக்கும்
ஏகாந்தம் என் உலகம்
எளியவன் நான் என்பேன்

திரண்ட அன்பின் அணைப்பு
மிரட்சி இல்லா தூக்கம்
புரட்சி செய்யா வயிறு
இரக்கம் நிறைந்த அம்மா
ஈரம் இல்லா டயபர்

அகத்தின் நிறைவே மாட்சி - என்
முகத்தின் மலர்ச்சியே சாட்சி
நெகிழ்ச்சி மிகுந்த தழுவல்
மகிழ்ச்சி எனக்குப் புதிரல்ல!

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (30-Jan-22, 9:02 am)
பார்வை : 136

மேலே