உதடுகளின் உச்சரிப்பு மூலம் உண்மையான அன்பு புலப்படுவது அரிது!...
உதடுகளின் உச்சரிப்பு மூலம்
உண்மையான அன்பு புலப்படுவது
அரிது! ஆனால் கண்கள் பேசும்
கவிதைகளை எள்ளளவும்
குறையின்றி உணரமுடிகிறது,
இமைகளின் பாதுகாப்பில் விழிகள்
நாட்டியம் புரிகின்றன! மகிழ்ச்சி
துக்கம் என இரு தருணத்திலும்
கண்கள் கசிந்துருகி உணர்வுகளை
வெளிக்கொள்கின்றன! இறைவன்
படைப்பில் கண்கள் ஓர் அதிசயம் ...
-மு.விக்னேஷ்(மு.வி)