அரசியல் மறுமலர்ச்சி ஊழலற்ற சமுதாயம் வரவேண்டும் என்றால் நம்...
அரசியல் மறுமலர்ச்சி
ஊழலற்ற சமுதாயம் வரவேண்டும் என்றால் நம் அரசியல் அமைப்பு சட்டத்தில், சில என்ன, பல திருத்தங்கள் கொண்டு வரவேண்டும்.
அரசு அதிகாரிகளின் வயதுவரம்பு படிப்பு தகுதி ஆகியவற்றை பார்த்து அவர்களை பதவியில் அமர்த்துவது போல, மத்திய மாநில அரசை ஆளும் அரசியல்வாதிகளுக்கும் இதுபோல தகுதிகளை இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயிக்க வேண்டும், அதற்க்கு மத்திய அரசின் பாராளுமன்ற இரு அவைகளும் ஒப்புதல் தர வேண்டும், அது நடப்பது என்பது கேள்விகுறி தான். குறிப்பிட்டவைகளுக்கு சட்டத்திருத்தம் மசோதா என்று போடாமல், மொத்த அரசியல் சாசனங்களையும் பல நாட்டின் சட்ட வல்லுநர்கள் மற்றும் நம் நாட்டின் மூத்த சட்ட வல்லுநர்கள் முன்னாள் உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் மற்றும் இந்நாள் சட்டத்துறை அமைச்சர்கள் எனவும் மற்றும் அணைத்து மாநிலங்களிலிருந்தும் ஒரு உறுப்பினர் (அவர் கண்டிப்பாக மிக மூத்த மற்றும் அணுபவமிக்க சட்ட நிபுணராக இருத்தல் வேண்டும்) . இந்த மாற்றத்தில் முக்கியமாக அரசியல் கட்சி நடத்துபவரின் அடிப்படை தகுதிகள், பதவி வாரியாக மக்கள் தேர்ந்தெடுக்கும் உறுப்பினருக்கான தகுதி மற்றும் மாநிலத்தின் ஆளுநர்கள் முன்னாள் இந்திய ஆட்சிப்பணி , இந்திய காவல்பணி மற்றும் முன்னாள் நீதிபதிகள் ஆகியோராகத்தான் இருக்கவேண்டும் எனவும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
இது போல சில திருத்தும் கொண்டு வந்தால் தான் தற்போதைய சுழலுக்கேற்றார் போலும் , எதையும் சமாளிக்க கூடிய திறமை மிகுந்த அரசியல் தோழர்கள் கிடைப்பார்கள் .
நன்றி,
மு.வி (மு.விக்னேஷ்)