பூபாலன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பூபாலன்
இடம்:  கும்பகோணம்
பிறந்த தேதி :  02-Sep-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Dec-2011
பார்த்தவர்கள்:  456
புள்ளி:  115

என் படைப்புகள்
பூபாலன் செய்திகள்
பூபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2017 12:28 pm

எத்தனை ஆசை, எவ்வளவு தூர பயணம்,

விவரிக்கமுடியா வார்த்தைகளை - தேக்கி

எடுத்துசென்றுகொண்டிருந்தேன் கண்களில் - ததும்பியது.

என்ன துக்கமோ!, மேக மகள் ஆவி தழுவி

விழிகளில் கரைந்தாள் - மழையாய்.

மேலும்

பூபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2017 9:56 am

சிறு கிளை கொட்டியது,
மரங்கொத்தி சாவகாசமாக கொட்டியது,

நிசப்த நொடிகளில்,
சொட்டும் தண்ணீர் கொட்டியது,
காத்திருந்த மணிகளில்,

நொடிமுள்ளும் அவ்வப்போது கொட்டியது,
கடையில், பாவை பார்வையும் கொட்டியது,
தேடுகிறேன் வலியை, வழியை...

மேலும்

பூபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2017 1:55 pm

பெண்களின் கூந்தலிற்கு,
இயற்கையிலே வாசம் உள்ளதாம்,

அதனாலோ உணவில் - முடி!?...

மேலும்

பூபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2017 7:40 pm

பசியில் அமர்ந்திருக்க ,
இட்லீ பானையில் நீர் தெளித்து,
இதழ் விரித்து, பரிமாறினாள்,
இனித்தது - தேன் போல்

மேலும்

பூபாலன் - வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2017 3:45 pm

உனக்காக உருப்படியாய் செய்யும் செயல்கள்
இரண்டு மட்டும்தான் !

அருகே இருந்தால்
இமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பதும் !

அருகே இல்லை என்றால்
மறக்காமல் நினைத்துக்கொண்டிருப்பதும் !

மேலும்

உங்களைப்போன்ற அன்புத்தம்பிகள் ...சகோதரிகள்..நண்பர்களின் ஊக்கம் தரும் வாழ்த்துக்களில் ..அப்டியே போயிட்டே இருக்கு ..நன்றி நன்றி நன்றி 26-Jun-2017 7:01 pm
எப்படிணா இப்படிலாம்... 26-Jun-2017 6:49 pm
கருத்தில் மிக்க மகிழ்ச்சி நண்பர் mohamed sarfan 26-Jun-2017 6:02 pm
கவிதைகளின் ரகசியம் இப்போது தான் வெளிவருகிறது 26-Jun-2017 5:59 pm
பூபாலன் - கேப்டன் யாசீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-May-2017 7:14 am

முதலில்
உறக்கத்தைத் தா.
பிறகு
கனவுகளோடு வா.

மேலும்

இரு பக்கமும் நலன் பயக்கும் காதல் ஒப்பந்தம் 31-May-2017 10:15 pm
தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள் 30-May-2017 12:55 pm
பூபாலன் - கேப்டன் யாசீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-May-2017 6:43 am

மற்றவர்களிடம்
வாழ்த்துகளை எதிர்பார்த்திருந்தாலும்
உன்னிடம் கவிதைகளை
எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
கிடைக்குமா....
காதலோடு ஒரு கவிதை.

மேலும்

கவிதை உலகமே காதல் தானே! 31-May-2017 10:23 pm
காதலில் காத்திருப்பு சுகமே... 30-May-2017 12:49 pm
பூபாலன் - ஆர் மகாலட்சுமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-May-2017 1:01 am

நீ!
பதினாறு வயது இளமைக்கு,
பத்து ஆறு வயது முதுமைக்கு,
முதுமையிலும் பதினாறாய் என் இதயத்தில் நீ!

மேலும்

நன்றி சகோதரரே! 05-Jun-2017 10:20 am
என்றும் பதினாறு... 30-May-2017 12:47 pm
பூபாலன் - ஆர் மகாலட்சுமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-May-2017 12:53 am

நேரம்!
பலருக்கு போதாது,
சிலருக்கு போகாது,
எனக்கு இருப்பதே தெரியாது, நேரம்!
என் அருகில் நீயிருந்தால்!

மேலும்

நன்றி சகோதரரே! 05-Jun-2017 10:23 am
நேரம், காலம் ஏதும் இல்லை, மாயம் மட்டுமே... 30-May-2017 12:43 pm
பூபாலன் - பாரதி நீரு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2017 3:02 pm

எனக்கு தெரிந்த
தேவதைகளின் இலக்கணங்களை
தகர்த்தவள் அவள்...

#தேவதைக்காரி...

மேலும்

பார்வைகளால் அம்பு விடுகிறாள் 30-May-2017 5:37 pm
பூபாலன் - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-May-2017 7:54 pm

நீ நான் நிலா
போக‌லாமா கவிதை உலா

உன்னைப் பார்க்காதவரை எனக்கு வெயில்
பார்த்த பின்னாலே எப்போதுமே குளிர்

நீ பேசும் பேச்சிலெல்லாம் காதல்
நீ பேசிக்கொண்டிருக்கும் போது
என் கண்ணுக்கும் இமைக்கும் இல்லை மோதல்

ஆவென வாய் திறந்தே உன் அழகை ரசிப்பேன்
போவென செய்கை செய்தே என் அருகில் வருவாய்

உன் மிரட்டல் கொள்ளை அழகு
விழி எனக்கு காட்டும் பல கவிதை மொழி

இதழ்கள் ஆடும் நாட்டியம் பரமானந்தம்
பிரிவே இல்லாததே நமது பந்தம்

நீ சிரிக்கும் அழகின் முன்
உவமையாக எதைச் சொல்ல‌
மொழியில் வார்த்தைகள் இல்லை அதைச் சொல்ல‌

காதலிக்காதவரை நான் தனியாய் இருந்தேன்
உன்னில் விழுந்த பின்னாலே
எப்போதும் துணையாய் இ

மேலும்

காதலால் விளைகின்ற உயிரியல் மாற்றத்தை உணர்வு பூர்வமாக படம் பிடிக்கிறது கவிதை 24-May-2017 6:58 pm
போற்றுதற்குரிய காதல் கவிதை பாராட்டுக்கள் தொடரட்டும் உமது தமிழ் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 23-May-2017 8:49 pm
காதலிக்காதவரை நான் தனியாய் இருந்தேன் உன்னில் விழுந்த பின்னாலே எப்போதும் துணையாய் இருக்கிறது காதல் அடிக்கடி நலம் விசாரிக்கிறது கவிதை// அழகு...!! 22-May-2017 10:21 am
பூபாலன் - இதயம் விஜய் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-May-2017 9:01 am

பள்ளிச் செல்லும் குழந்தைகள்
பருவம் எய்திய
பட்டாம் பூச்சிகள்
தலை நரைத்த கிழவிகள்
மடியில் அமரும் குழவிகள்
தாலிக்கொடி மலர்ந்தப் பூக்கள்......

வால் முளைக்காது
சேட்டைகள் செய்திடும் இளையோர்கள்
அரும்பு மீசையோடு
குறும்புகள் குடியிருக்கும் வாலிபர்கள்
முறுக்கிய மீசையோடு
மணமேடை ஏறிய கால்கள்
தள்ளாடும் தாத்தாவோடு
நானும் ஒரு மூலையில்......

எழுகின்ற சத்தமும்
புது இன்னிசையாய்
செவிகளில் பாய்ந்து
சன்னலில் நுழையும் தென்றலோடு
மனதினை மயக்கிட
அதிகமாகியது
கூட்ட நெரிசல்......

கருப்புப் பூனையாய்
காமம் தன்நிலை மீறி
காஞ்ச மனத்தோடு
உரசி பார்க்கும் கொடியோரால்
செம்பூ விழுந்து
தாங்காது துடிக

மேலும்

தொடர்ந்து நடப்பதால் பாவங்கள் பழகிவிட்டது ...முற்றிலும் அது தவறு ..அருமை நண்பா 03-May-2017 7:21 pm
மிக்க மகிழ்ச்சி. தங்கள் கருத்தெனும் நீரூற்றில் என்றன் கவிதைகள் மலர்ந்து மணம் கமழ்கிறது. அகம் நிறைந்த அன்பின் நன்றிகள் நண்பரே... 03-May-2017 7:36 am
உங்களை போன்றோர்களை பார்க்கும் போதுதான் இன்னும் சுற்றத்தை கவனிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. பலர் அனுபவித்து மறந்த எண்ணக்கோர்வையை பார்க்கிறேன். சிறப்பு. 02-May-2017 6:54 pm
நிச்சயம்... தங்கள் கருத்தெனும் நீரூற்றில் என்றன் கவிதைகள் மலர்ந்து மணம் கமழ்கிறது. அகம் நிறைந்த அன்பின் நன்றிகள் நண்பரே... 02-May-2017 6:35 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (32)

இவர் பின்தொடர்பவர்கள் (32)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
thozhi

thozhi

நாகர்கோயில்

இவரை பின்தொடர்பவர்கள் (32)

thozhi

thozhi

நாகர்கோயில்

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே