அமுதன் பரிமளசெல்வன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அமுதன் பரிமளசெல்வன்
இடம்:  கலிபோர்னியா
பிறந்த தேதி :  08-Nov-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Jan-2014
பார்த்தவர்கள்:  397
புள்ளி:  135

என்னைப் பற்றி...

தமிழறிவு தேடி தஞ்சம் புகுந்தவன்.... !

என் படைப்புகள்
அமுதன் பரிமளசெல்வன் செய்திகள்
கார்த்திகா அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Jun-2015 5:15 pm

அரை மணிக்கொருதரம்
அலறும் அலைபேசி
சிணுங்குகிறது செல்லமாய்..

காலையில் நீ
ஊட்டிய பூரி
தொண்டைக்குழியில்
இன்னும் தித்திப்பாய்..

கொஞ்சம் கொஞ்சமாய்
சிரிப்பை நீளமாக்குகிறேன்.....
நன்றியிலும் மன்னிப்பிலும்..

தவறி விழுந்த
குறிப்பேட்டை எடுத்து
முத்தமிட்டு கைச் சிறையாக்குகிறேன்..
உன் பெயர் எழுதி இருப்பதாலோ!

காலை வணக்கம்
சொல்லிக் கொண்டே இருக்கிறேன்
சூரியன் கடந்து போன பின்னும்
உன் குரல் கேட்டு
துயில் கலைந்ததால்!

நீ கொடுத்த
சாக்லேட்களை எறும்புக்கு
கொஞ்சம் தந்துவிட்டேன்
அமிர்தம் ருசிக்கட்டும் அவை!

யாரங்கே !
நட்சத்திரங்கள் கோர்த்த
வானவில் மாலைகள்
இரண்டு தய

மேலும்

அட அட..கலக்கல் காதல் கவிதை. 12-Dec-2015 2:16 pm
மிக்க நன்றி நட்பே... 13-Jun-2015 3:59 pm
மிக்க நன்றி நட்பே... 13-Jun-2015 3:58 pm
அருமையான உணர்வு !! 13-Jun-2015 3:54 pm
கார்த்திகா அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Jul-2015 11:38 am

இலையுதிர் மரமொன்றின்
தவத்தினால் சிறுகிளைகளை
பறித்த காற்று
மிச்சம் விட்டு வைத்தது
பூக்கொய்த தழும்புகளை..

மேலும்

மிக்க நன்றி நட்பே.. 26-Jul-2015 1:24 pm
நீங்கள் சொல்வது மிக அழகு ....மிக்க நன்றி நண்பரே... 26-Jul-2015 1:24 pm
மிக்க நன்றி ஐயா... 26-Jul-2015 1:23 pm
கார்த்திகா அளித்த படைப்பில் (public) இராஜ்குமார் Ycantu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Aug-2015 11:48 am

பிடிக்குமென்றும் பிடிக்காதென்றும்
நீங்கள் மறுதலிக்கும் கணங்கள்
எங்கள் அகராதியில் வடிக்கப்படாதவை

நீங்கள் சொல்லும் நிறத்தால்
இந்த பூமி சாயம் கொண்டிருந்தால்
வெளுத்து வெற்றிடத்திற்கே
வேலை இல்லாது
கண்ணடைத்திருக்கும்

உயரங்கள் கொண்டு
பெண்ணை அளப்பீர் என்றால்
குறை(வு) எங்கே?

அழகும் இளமையும்
போதுமென்றால்
வயதிற்கல்லவா 144
இட வேண்டும்

நிறங்களாலும் உடலமைப்பாலும்
இழிவு சொல்லும் பேயரை
ஒரு கணம் ஒரே ஒரு கணம்

தசையினுள்ளே
குருதி நாளங்களின் கொதிப்பில்
இரைப்பையும் குடல்களும்
இணைந்த திரவ நிலையை
திறந்து உயிர்க்கச்
செய்தல் அவசியமே!

மேலும்

அசத்தல்.. 12-Dec-2015 2:05 pm
அற்புதம் தோழியாரே..வாழ்த்துக்கள் 07-Sep-2015 11:31 pm
பாலினம் மறந்து .. யாவும் மானுட உயிர் ...மனம் ...என்பதை உள்வாங்கினால் ..உணர்தல் ஒரே நேர்கோட்டில் மனிதம் கோர்த்து நிற்கும் .. 01-Sep-2015 6:51 am
ஆஹா மிக அருமை தோழமையே... பெண்மையின் ஆணி வேரை கிளை பரப்பி ஒரு மரமாக விழுதாக உணர வைத்து விட்டு போகிறது படைப்பு... சில இடங்களில் சாட்டையடி வரிகள்... காலத்திற்கேற்ற படைப்பு... மிக சிறப்பு தோழமையே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Aug-2015 1:11 am
அமுதன் பரிமளசெல்வன் - கார்த்திகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Dec-2015 8:23 pm

எப்போதும் போல்
பொறுமையோ சகிப்போ
கொண்ட அதி தீவிரத்துடன்
நடந்து கொண்டிருந்தபோது
அது நடந்தே விட்டது!

கச கச
காய்கறிச் சந்தையில்
ஊட்டி காரட் வந்திறங்கியதாய்
மணந்தாள் வண்ணப் பூச்சில்..

அவளுக்கும் கூட
அது புதிதாய்
இருந்திருக்கலாம்..

எப்போதும் போல்
கூச்சத்திற்கும்
நெளிவுகளுக்கும்
பழகி இருந்திருப்பாள்.....

அவள் தாய் சொல்லி இதை
அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்..

பக்கத்து கோவிலில்
சாமி கும்பிட வந்தவளை
நவ கிரகமாய் ஒதுக்கப்பட்டதில்
கூட்டத்திலிருந்து
விலகியே தெரிந்தாள்..

"இன்னைக்கு ஏதும்
சவாரி கிடைக்கலையோ இதுக்கு?"
என் யோசனையில் இடறி

அவசர வாகனத் த

மேலும்

mikka nanri natpe.. 18-Dec-2015 3:44 pm
சிந்தனை சிறப்பு.. 12-Dec-2015 2:01 pm
மிக்க நன்றி நட்பே... 11-Dec-2015 8:09 am
பெண்மை போற்றுகிறேன், அவளை தலை வணங்குகிறேன் 11-Dec-2015 12:21 am
அமுதன் பரிமளசெல்வன் - அமுதன் பரிமளசெல்வன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Dec-2015 5:20 am

அங்கும் இங்குமாய் அலைந்து திரிந்து ஒருவழியாய் ஏற்பாடு  தேவதைகளின் திருவிழா உன் பிறந்தநாளென...🎉

நீ திண்டாட..  
நான் கொண்டாட..
என்ன வழியுண்டு,👣

ஆவாரம் பூவெடுத்து,
அல்லி பூ தொடுத்து, பச்சையம் தொலைந்த பதினாறு பூ பறித்து,
உன்னழகில் பாதியாய் 
ஒரு பூங்கொத்து...💐

அன்பை அள்ளித்தர ஆயிரம் முறையுண்டு, 
முறைகளில் முதலென்பதால் முரணின்றி முத்தமொன்று... ஆழமாய்,💋
 
கொல்லமுடியா தூரமென தொலைவாய், 
தூரமாய்... நீ

குமுறலுடன் குறுந்தகவலே முடிவென்றாதானதால் 
பிறந்தநாள் பரிசென ஓர் கவிதை உனக்காய்...🎁🎁

மேலும்

நன்றி தோழமையே 12-Dec-2015 1:50 pm
ஆழமான புரிதலோடு அழகாய் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ஐயா 12-Dec-2015 1:49 pm
காதல் சொல்லோடை இனிமை . ஆவாரம் பூவெடுத்து, அல்லி பூ தொடுத்து, பச்சையம் தொலைந்த பதினாறு பூ பறித்து, உன்னழகில் பாதியாய் ஒரு பூங்கொத்து...💐 ----இத்தனையும் செய்து" உன்னழகில் பாதியாய்.ஒரு பூங்கொத்து ..."என்கிற ஒப்பிடல் அழகு. பாதி மலர் விழிகள் மீதி மலர் புன்னகை முழு மலர் அவள் ! வாழ்த்துக்கள். அமுதன் பரிமளன் செல்வன் அன்புடன்,கவின் சாரலன் 12-Dec-2015 10:21 am
துள்ளல் இனிமை 12-Dec-2015 6:50 am

அங்கும் இங்குமாய் அலைந்து திரிந்து ஒருவழியாய் ஏற்பாடு  தேவதைகளின் திருவிழா உன் பிறந்தநாளென...🎉

நீ திண்டாட..  
நான் கொண்டாட..
என்ன வழியுண்டு,👣

ஆவாரம் பூவெடுத்து,
அல்லி பூ தொடுத்து, பச்சையம் தொலைந்த பதினாறு பூ பறித்து,
உன்னழகில் பாதியாய் 
ஒரு பூங்கொத்து...💐

அன்பை அள்ளித்தர ஆயிரம் முறையுண்டு, 
முறைகளில் முதலென்பதால் முரணின்றி முத்தமொன்று... ஆழமாய்,💋
 
கொல்லமுடியா தூரமென தொலைவாய், 
தூரமாய்... நீ

குமுறலுடன் குறுந்தகவலே முடிவென்றாதானதால் 
பிறந்தநாள் பரிசென ஓர் கவிதை உனக்காய்...🎁🎁

மேலும்

நன்றி தோழமையே 12-Dec-2015 1:50 pm
ஆழமான புரிதலோடு அழகாய் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ஐயா 12-Dec-2015 1:49 pm
காதல் சொல்லோடை இனிமை . ஆவாரம் பூவெடுத்து, அல்லி பூ தொடுத்து, பச்சையம் தொலைந்த பதினாறு பூ பறித்து, உன்னழகில் பாதியாய் ஒரு பூங்கொத்து...💐 ----இத்தனையும் செய்து" உன்னழகில் பாதியாய்.ஒரு பூங்கொத்து ..."என்கிற ஒப்பிடல் அழகு. பாதி மலர் விழிகள் மீதி மலர் புன்னகை முழு மலர் அவள் ! வாழ்த்துக்கள். அமுதன் பரிமளன் செல்வன் அன்புடன்,கவின் சாரலன் 12-Dec-2015 10:21 am
துள்ளல் இனிமை 12-Dec-2015 6:50 am

உம்மிடம்
பேசிக்கொண்டிருக்க
நேக்கு நேரமில்லை !

ஒரு காரியமாக
போய்க்கொண்டிருக்கிறேன் !

மடிப்பசு
எதிரே வருகிறது !
போகிற காரியம்
ஜெயம் தான் !

நிறை சுமங்கலி
குழந்தையுடன் !
பேஷ் ! பேஷ் !

காளை மாட்டுவண்டியும்
எதிரே !
ஜோர் !

கன்னியொருத்தி
புன்னகையுடன் !
ஷேமமா இரு
கொழந்தே !

பிஹி பிஹி பிஹி !
குதிரையா ...........
அடிசக்கை !

எண்ணைத் தலையன்
இல்லை !

பூனை
இடம் போகவில்லை !

விதவை எவளும்
வரவில்லை !

நேக்கு இன்னைக்கு
அனைத்தும்
சுபமே !

கஹ்ஹ்ஹ்ஹ்

அதென்ன
சத்தம் ?

திரும்பினேன்
என்னைக் கடந்து போன
ஒருவனை
வண்டி அடித்திருந்தது !

மேலும்

வெகுநாட்கள் கழித்து வந்து கருத்திட்டுள்ளீர்கள் தோழி ! மிக்க நன்றி ....... 30-May-2014 4:21 pm
தூள்......! நல்லா சொன்னீங்க படைப்பு அருமை மிக மிக அருமைத்தோழா..! 30-May-2014 4:08 pm
வாசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா 10-May-2014 7:44 am
அட்ரா சக்கை..! செம... செம்மை..! 09-May-2014 10:59 pm
அமுதன் பரிமளசெல்வன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
09-May-2014 8:26 pm

ஆணுக்கு அழகு எது ?

மேலும்

பெண் கொண்ட ஆண்மை உணர்தல்.... 05-Jun-2014 10:12 pm
பிறன் மனை நோக்காமை. 11-May-2014 11:29 am
கருத்திற்கு நன்றி தோழமையே .. 10-May-2014 10:55 pm
ம்ம்.. கருத்திட்டமைக்கு நன்றி தோழமையே.. 10-May-2014 10:54 pm

பணம்
வெறும் காகிதம் தான்
கையில் கிடைத்தால்
கசக்கி கிழித்தெறியும்
குழந்தைக்கு மட்டும்.

மேலும்

மிக்க நன்றி .. 10-May-2014 10:27 pm
கருத்திற்கு நன்றி தோழமையே .. 10-May-2014 10:27 pm
கருத்திற்கு நன்றி நண்பா 10-May-2014 10:26 pm
ஆஹா ..அருமை 10-May-2014 1:32 pm
அமுதன் பரிமளசெல்வன் - Arulmathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-May-2014 6:49 pm

காதல் ஆத்திச்சூடி !
அ ன்பே
ஆ ருயிரே
இ தயத்தை
ஈ ரமாக்கிப்போன
உ றவே
ஊ டல் கொள்ளும்
எ ன்னுயிர்
ஏ ந்தலே !
ஐ ந்தவம் புரிந்தேன்
ஒ ன்றாய்
ஓ ருயிராக !
ஔ டதமடி உன்
கஃடு(கள்) ஊறிய

க ண்கள் என்
கா தல் நோய்க்கு !
கி றுக்காகிக் காதல்
கீ ச்சிடும்
கு ரங்காய் உன்
கூ டல் வேண்டி
கெ க்கலி கொண்டேனடி !
கே ட்ட வரம்
கை யூட்டின்றி
கொ டுக்கும்
கோ தையே !
கௌ த்துப திருமாலின்

ச ங் கொத்த கழுத்தும்
சா மவேதக் குரலும்
சி றைவைக்குமடி என்
சீ ற்றத்தை !
சு டர்மதிச்
சூ ரியன் மகளே
செ ங்கை
சே ர்த்து
சை த்தியம் சென்று
சொ ர்கத்துச்
சோ தியாய் மாறிவிடவேண்டுமடி!
சௌ க்கியமா நீ

மேலும்

Nandri 11-May-2014 10:05 am
அகம் பொங்கியது ஆம் நன்றென்று இழை விரித்த இதழால் ஈகைக் கொடுத்த உன் கரு உயிர்ப் பெற்று ஊனுடன் நலம் பெற்று எங்கேயோ ஓரிடத்தில் ஏந்திழையாள் கைப்பட்டு ஐந்திணைகள் ஒருங்கிணைந்து ஓங்கி வளர்ந்த கரு ஔவையாய் ஓதிய புதிய 'ஆத்திச் சூடி' எமக்கு நன்றாய் இன்று ... 09-May-2014 11:18 pm
மிக அருமை நன் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 09-May-2014 8:01 pm
இதை நகல் எடுத்துக்கொள்ளலாம் போலிருக்கே..! ஆத்திச்சூடி... ”ஆத்தி இம்புட்டு நல்லா இருக்கே ” என்று பிரமிக்க வைக்கிறது . வாழ்த்துகள் தோழி 09-May-2014 7:53 pm
அமுதன் பரிமளசெல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2014 8:10 pm

இனிப்பியலின் இயல் அழகே,
என் தோழியே ! உன்னோடு
என் நட்பு பூத்ததெப்படி?
மொழிகிறேன் கேள்....

என்னோடு பேச
ஒரு கோடி வார்த்தைகளிருந்தும்
உதட்டோடு பூட்டிக்கொண்ட உன்
வார்த்தைகளில் பூத்ததோ ?
இல்லை..

நீ கைமூடி, இதழ் திறந்து,
என் மேல் வீசிய
பஞ்சுமிட்டாய் புன்னகையால் பூத்ததோ ?
இல்லை...

நான் அழைத்து
தொலைவுக்கு அப்பால் இருந்த
அலைபேசி அழைப்பின்
தனிமையில் பூத்ததோ ?
இல்லை..

உப்பு ஒளிந்த கடல்காற்று
கருணையின்றி உன் கன்னம் வருட,
காரமாய் நீ சுவைத்த
மீன் துண்டால் பூத்ததோ ?
இல்லை..

நீ சோகத்திலே கிடந்தாலும்
நான் ரசிப்பேன் என்பதற்க்காய்
நீ அனுப்பிய ஒரு கூடை
சிரிப்பி

மேலும்

கைத்தட்டுறது காதுல கேட்குதா....? செம செம 31-May-2014 11:47 am
வரவில் மகிழ்ச்சி தோழமையே.. 09-May-2014 6:49 pm
எல்லாம் அண்ணனிடம் கற்றுக்கொண்டது தான்....பஞ்சுமிட்டாய் ருசித்ததற்க்கு நன்றி அண்ணா.. 09-May-2014 6:48 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வித்யா. 09-May-2014 6:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (119)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
கவிப்ரவீன்குமார்

கவிப்ரவீன்குமார்

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (120)

நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
எஸ்.கே .மகேஸ்வரன்

எஸ்.கே .மகேஸ்வரன்

பொட்டகவயல், முகவை ,
a.lawrence

a.lawrence

தூத்துக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (121)

என் படங்கள் (1)

Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே