காதல் ஆத்திச்சூடி
காதல் ஆத்திச்சூடி !
அ ன்பே
ஆ ருயிரே
இ தயத்தை
ஈ ரமாக்கிப்போன
உ றவே
ஊ டல் கொள்ளும்
எ ன்னுயிர்
ஏ ந்தலே !
ஐ ந்தவம் புரிந்தேன்
ஒ ன்றாய்
ஓ ருயிராக !
ஔ டதமடி உன்
கஃடு(கள்) ஊறிய
க ண்கள் என்
கா தல் நோய்க்கு !
கி றுக்காகிக் காதல்
கீ ச்சிடும்
கு ரங்காய் உன்
கூ டல் வேண்டி
கெ க்கலி கொண்டேனடி !
கே ட்ட வரம்
கை யூட்டின்றி
கொ டுக்கும்
கோ தையே !
கௌ த்துப திருமாலின்
ச ங் கொத்த கழுத்தும்
சா மவேதக் குரலும்
சி றைவைக்குமடி என்
சீ ற்றத்தை !
சு டர்மதிச்
சூ ரியன் மகளே
செ ங்கை
சே ர்த்து
சை த்தியம் சென்று
சொ ர்கத்துச்
சோ தியாய் மாறிவிடவேண்டுமடி!
சௌ க்கியமா நீ ?
ஞ மலியாய் குரைக்குதடி உன்
ஞா பகங்கள் !
ஞி மிறு நுகரும்
ஐஞ் ஞீ லம் மிக்க கூந்தலாளே !
ஞெ கிழிப் பார்வையால் எரித்த
ஞே யாவே !
ஞொ ள்கிப் போனேனடி நீயின்றி !
ட மாரம் நெஞ்சில் ஒலிக்க
டா லரை ஏறுதடி உன் நினைப்பு !
டி க் டிக் இதயம்
டீ க்கடை ஓரத்தில் ஏங்குதடி !
டு ம் டும் கொட்டலாம்
டெ ல்லித் தலைநகரில் !
த ண்ணீருக்கே
தா கம்
தி னமும் அருந்தினாலும்
தீ ரமருக்குதடி !
து ள்ளும் இளமையால்
தூ க்கம் மறந்தேன்
தெ ன்றலும்
தே னும் தெவிட்டிப்போனதடி
தை யலால் உன் சொல் முன் !
தொ ங்கும்
தோ ட்டத்தில் விளைந்திட்ட
தெள திகமடி நீயெனக்கு !
ந ங்கூரமிடப்பட்ட உறவுகளில்
நா ம்
நி த்தமும்
நீ ந்திய காதல் ஓடத்தில்
நு ழைந்த
நூ ற்றுக்கணக்கான துளிகளும் முத்தாய்ப்போனதடி !
நெ ற்றிப்பொட்டில் தொலைத்த
நே ரங்கள்
நை ந்து
நொ ந்து நொடிந்து
நோ ய்தீர
நௌ லி கற்றேனடி !
ப சலை படர்ந்த கண்களைப்
பா ர்த்துப் பார்த்து
பி த்தனாகிப்போனேன் !
பீ லியில் மைதடவி
பு ண் செய்யும்
பூ வே !
பெ யர்சொன்னாலே
பே சமறுத்து வெட்கும்
பை ந்தமிழே !
பொ சுக்கும் பார்வை
போ துமடி
பௌ திக வினைபுரியும் பௌர்ணமியே !
ம ஞ்சத்தில் மயங்கிய
மா னாய் நீ !
மி ன்னலை ஒளித்துக்கொண்ட
மீ கல முகிலாய் நான்
மு தலிரவின் முன்னோட்டம்
மூ டுபனியாய் என்
மெய் தொட
மே னி சிலிர்த்து
மை யல் கொண்டேன் !
மொ ட்டுக்களின்
மோ கத்தைத் தீர்க்கும் தேனீக்கள்
மௌ னமாய் - அப்படித்தான் நானும் !
ய வனத் தந்தம்
யா ழ்ப்பாணத்து முத்து உன் பல்வரிசை !
யு கம் யுகமாய்
யூ கிக்க முடியா உள்ளுணர்வுகள் சுமக்கும் காதல்
யோ கி
யெள வனம் மாறா காதல் யுவதி நான் !
ர ம்மியக் கட்டிலில்
ரா ணி
ரி து வான அழகு மனதில்
ரீ ங்காரமிட
ரூ பமாய் ஜொலிக்க காதல்
ரோ கியாய் நான் !
ல ட்சியங்களின்றி லௌ கீகத்தில்
லா டமற்ற குதிரையாய் நான் !
லி ல்லியின்
லே சான இதழ்களாய் கனத்தது மனது !
வ னப்பில்
வா ழ்விழந்த வாலிபர்கள் வரிசையில்
வி தியென்று
வீ ற்றிருக்கும் ஓருயிராய் நான் !
வெ குண்டு எழுந்த
வே ங்கையாய் நான் !
வை கையில் மிதந்து வரும்
வௌ வமாய் நீ !
வா படிக்கலாம் காதல் ஆத்திச் சூடி !