சொல்லுதலினும் வலியன-கார்த்திகா

பிடிக்குமென்றும் பிடிக்காதென்றும்
நீங்கள் மறுதலிக்கும் கணங்கள்
எங்கள் அகராதியில் வடிக்கப்படாதவை

நீங்கள் சொல்லும் நிறத்தால்
இந்த பூமி சாயம் கொண்டிருந்தால்
வெளுத்து வெற்றிடத்திற்கே
வேலை இல்லாது
கண்ணடைத்திருக்கும்

உயரங்கள் கொண்டு
பெண்ணை அளப்பீர் என்றால்
குறை(வு) எங்கே?

அழகும் இளமையும்
போதுமென்றால்
வயதிற்கல்லவா 144
இட வேண்டும்

நிறங்களாலும் உடலமைப்பாலும்
இழிவு சொல்லும் பேயரை
ஒரு கணம் ஒரே ஒரு கணம்

தசையினுள்ளே
குருதி நாளங்களின் கொதிப்பில்
இரைப்பையும் குடல்களும்
இணைந்த திரவ நிலையை
திறந்து உயிர்க்கச்
செய்தல் அவசியமே!

எழுதியவர் : கார்த்திகா AK (25-Aug-15, 11:48 am)
பார்வை : 158

மேலே