இரசனை

இரவின் பிடியில்
பால்வெளியில்
பரந்திருக்குமிந்த
நட்சத்திரங்கள்
எப்போதுமெனக்கு
குழந்தையின் குதூகலத்தை
மகிழ்ச்சியில் கலந்துத்
தரக்கூடியவை...
இந்த நட்சத்திரக்காரிக்கும்
மாமியாளுக்கும் ஆகாதென
குடந்தை ஜோசியர்
சொல்லித் தள்ளிப்போன
அக்காக் கல்யாணத்திலிருந்து
நட்சத்திரங்களை வெறுக்கத்
தொடங்கியிருந்தேன்.

எழுதியவர் : தர்மராஜ் (25-Aug-15, 11:24 am)
பார்வை : 83

மேலே