இதுதாண்டா நாடு
காந்தி சிலையருகே
காக்கைகளின்
ஒற்றுமை மாநாடு...
அதை விரட்டியடிக்குது
அருகே அமர்ந்திருக்கும்
மனிதர் கூட்டம்...
மனிதர்களில்தான்
ஒற்றுமை இல்லை
அதைச்சொல்லித்தரும்
காக்கைகளுக்குக்கூடவா
இந்நிலை..?
நல்ல வேளை
சிலையானதால் நான் தப்பித்தேன்..
சொன்னது காந்தி சிலை..