குறளொன்றிருந் தென்ன லாபம்

குறளொன்றிருந் தென்ன லாபம்
-இன்றொரு
குறுங்கவி புரிந்தென்ன லாபம்

ஏட்டினில் ஏற்றிய கவியோ
பாரது போற்றிய கவியோ
பாமரன் கற்றிடும் அளவில்
பா(ர்) என வருவது மில்லை அதன்
பால் நிலை அறிவதுமில்லை

புரட்சி கவியும் மாண்டது இங்கு
பாரதி தலையும் வீழ்ந்தது இன்று
தமிழே தகிடதாம் ஆடுகையில்
ஆழ்தமிழ் சொல்லினால் சேர்ந்திடுமோ
ஆழ்கடல் தன்னில் போய் வீழ்ந்திடுமோ

ஆத்திர காரனின் அவசர புலம்பலில்
பொழுதுகள் இங்கே விடிவதில்லை
ஆதங்க பேச்சும் அனலெனும் மூச்சும்
அடுத்தவர் மனதை நிறைப்பதில்லை

இன்றைய இளையோர் இருப்பவர் தனையே
இறுக்கி பற்றி அணைப் பதில்லை
நாளைய தலைமுறை என் நாவினை
பிடுங்கும் என்பது நடந்திட வாய்ப்பேயில்லை

போடா மனிதா போக்கிடம் தேடு
பொழுதினை அங்கு கழித்திடவே
புரட்சி என்ன புண் ணாக்கு என்ன
எதிர்பால் இன்பத்தில் திளைத்திடவே

பாமரனறியா கவியும் வீணே
பாதைகளறியா கவியும் வீணே
குமுறும் உந்தன் கழுத்தி னதிர்வும்
எழுதும் எங்கள் எழுத்தி னதிர்வும்
ஏங்கும் மானி டமறியா திருந்தால்
அதை தாங்கும் ஏடும்
காணா நாடும்
அனைத்துமிங்கு வீணே வீணே

எழுதியவர் : கவியரசன் (25-Aug-15, 10:09 am)
பார்வை : 69

மேலே