ரீமேக் வாழ்க்கை
அலைபேசியில்
மனைவி வாழ்த்தினாள்
முகநூலில்
நண்பர்கள் வாழ்த்தினார்கள்
உற்றார் உறவினர்
உடனிருந்து வாழ்த்தினார்கள்
புத்தம் புதிய உடை
பிரியாணி வகை
இன்று எனக்கு பிறந்த நாளாம்!
மூன்று கிலோ எடையில்
முகம் சிவந்து பிறந்தேன் என்றார்கள்
அன்று, எனக்கு எவரும் வாழ்த்து சொல்லவில்லை
என் அன்னைக்கு, தந்தைக்கு மட்டுமே வாழ்த்துக்கள்.
பிறந்தது நான் அல்லவா?
அடுத்த வருடத்தில் இருந்து எனக்கு மட்டுமே வாழ்த்துக்கள்
வந்துகொண்டு தான் இருக்கின்றன.
வருடங்களின் எண்ணிக்கை நீண்டன
வாழ்த்து சொல்பவர்கள் எண்ணிக்கையும் நீண்டன
பழையவர்கள் வெகுகுறைவே!
புதியவர்கள் வெகுநிறைவே!
எங்கே சென்றார்கள் என் பழையவர்கள்?
அரைகால் சட்டை
அஞ்சு பைசா அரஞ்சு மிட்டாய் பாக்கெட்
மதிய உணவிற்கு அம்மாவின் கேசரி
ஹாப்பி பர்த்டே- ச்வீட் எங்கடா?
லஞ்ச் க்கு என்னடா ஸ்பெஷல்?
என்று வினவும் என் பால்ய நண்பர்கள்
எங்கே இவைகள் எல்லாம் ?
டவுசர்- பேண்ட் ஆனது
அரஞ்சு மிட்டாய்- டைரி மில்க் ஆனது
அம்மாவின் கேசரி- கேக் ஆனது
ச்வீட் கேட்ட பால்ய நண்பர்கள்
ட்ரீட் கேட்கும் பருவ நண்பர்கள் ஆனார்கள்
எதோ ஒரு வகையில் ரீமேக் ஆகிருக்கிறது !
வாழ்க்கை.
இன்னும் சிலவருடங்களில்...
நானும் ரீமேக் ஆவேன்
என் மகனாகவோ, என் மகளாகவோ
அன்று முதல்
அவர்களுக்குத் தான் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.
ஆதலால்,
வாழ்க்கை ரீமேக் ஆகுவற்கு முன்பாக
வாழ்ந்து விடுவோம்
வாருங்கள்.!
-விஜய் கணேசன்