வாழ்க்கை உவமைகள்

தெளிந்த நீரோடை
தெரியாத முதலைகள்
இவையிரண்டும் வாழ்க்கைக்கு உவமைகள்

ஒருநாள் பெற்றவரோ சகோதரரோ
தோழமையோ மறைந்து போகும் போது
பயம் பாயாய் போர்த்திக்கொள்ளும்
கவலை திடமாய் ஒட்டிக்கொள்ளும்

அத்தினம் தனிமையின் நட்பே துணைவரும்...
உன்னுடன் இப்புவியில் மங்கி வரும் வெளிச்சத்திடமிருந்து
கடத்தி செல்லும் நிழலை இருள் இறுக்கிக் கொல்லும்...
அல்லது அவர்களின் பயணத்தில் நீ
வெறும் கால் வருடும் நாணலாய் இருக்கக்கூடும்.

உணர்வுகளை உணர்த்தும் உயிருள்ளவரை
இதயத்தில் நிறைந்த உறவுகளை உயிர்வளிப் போல்
உள்வாங்கி அவரவர் குறைகளைக்
கரிவளி போல் வெளிவீசி விடு ..

ஏனெனில் இங்கு எந்த மூச்சும்
நிரந்தரமில்லை...
யாரும் ஒரே கல்லறைக்கு உரியவரில்லை...

எழுதியவர் : குறிஞ்சிவேலன் தமிழகரன் (25-Aug-15, 2:51 pm)
பார்வை : 167

மேலே