சகுனங்கள்

உம்மிடம்
பேசிக்கொண்டிருக்க
நேக்கு நேரமில்லை !

ஒரு காரியமாக
போய்க்கொண்டிருக்கிறேன் !

மடிப்பசு
எதிரே வருகிறது !
போகிற காரியம்
ஜெயம் தான் !

நிறை சுமங்கலி
குழந்தையுடன் !
பேஷ் ! பேஷ் !

காளை மாட்டுவண்டியும்
எதிரே !
ஜோர் !

கன்னியொருத்தி
புன்னகையுடன் !
ஷேமமா இரு
கொழந்தே !

பிஹி பிஹி பிஹி !
குதிரையா ...........
அடிசக்கை !

எண்ணைத் தலையன்
இல்லை !

பூனை
இடம் போகவில்லை !

விதவை எவளும்
வரவில்லை !

நேக்கு இன்னைக்கு
அனைத்தும்
சுபமே !

கஹ்ஹ்ஹ்ஹ்

அதென்ன
சத்தம் ?

திரும்பினேன்
என்னைக் கடந்து போன
ஒருவனை
வண்டி அடித்திருந்தது !

எழுதியவர் : குருச்சந்திரன் (9-May-14, 7:57 pm)
Tanglish : sagunangl
பார்வை : 127

மேலே