காதலிக்கக் கற்றுத் தாருங்கள்-கார்த்திகா

அரை மணிக்கொருதரம்
அலறும் அலைபேசி
சிணுங்குகிறது செல்லமாய்..

காலையில் நீ
ஊட்டிய பூரி
தொண்டைக்குழியில்
இன்னும் தித்திப்பாய்..

கொஞ்சம் கொஞ்சமாய்
சிரிப்பை நீளமாக்குகிறேன்.....
நன்றியிலும் மன்னிப்பிலும்..

தவறி விழுந்த
குறிப்பேட்டை எடுத்து
முத்தமிட்டு கைச் சிறையாக்குகிறேன்..
உன் பெயர் எழுதி இருப்பதாலோ!

காலை வணக்கம்
சொல்லிக் கொண்டே இருக்கிறேன்
சூரியன் கடந்து போன பின்னும்
உன் குரல் கேட்டு
துயில் கலைந்ததால்!

நீ கொடுத்த
சாக்லேட்களை எறும்புக்கு
கொஞ்சம் தந்துவிட்டேன்
அமிர்தம் ருசிக்கட்டும் அவை!

யாரங்கே !
நட்சத்திரங்கள் கோர்த்த
வானவில் மாலைகள்
இரண்டு தயாராகட்டும் ..

அவன் வருகை
என் இதயத்திற்கு
மிக அருகில் துல்லியமாய்!!

எழுதியவர் : கார்த்திகா AK (6-Jun-15, 5:15 pm)
பார்வை : 211

மேலே