ஒரு தரம்

அந்த ஆண்டு..
நடந்த கோடைகால ..
ஊர்த் திருவிழா ..மட்டும்
மறக்க முடியாததாகிப் போனது..

சப்பரத்தில் சாமி
போய்க் கொண்டிருக்க..
மயிலாட்டமும்..
ஒயிலாட்டமும்..
தப்பட்டை முழக்கத்தின் பின்னே
சப்பரத்தில் சாமி
போய்க் கொண்டிருக்க..
..
மண்ணெண்ணெய் விளக்கும் ..
நாசி தொட்ட அதன் வாசமும்..
ஏகப்பட்ட துணிகள் நடுவே
ஏலக்காரர்..வியாபாரம்!

அச்சம் கலந்த வெட்கத்துடன்
பத்து ரூபாய்க்கு ..ஏலத்தில்
லுங்கி ஒன்றை நான்
எடுத்தபோது ..

ம்ம்..
ஐயாவுக்கு..இனி லுங்கிதானா ..
என்பது போல்
இரண்டு தோள்களின் நடுவில்
நின்று கேலியாக
பார்த்து சிரித்தவளின்
மல்லிகை முகம்
தெரிந்த..

அந்த ஆண்டு
ஊர்த் திருவிழா ..மட்டும்
மறக்க முடியாததாகிப் போனது..

எழுதியவர் : கருணா (6-Jun-15, 4:22 pm)
Tanglish : oru THRAM
பார்வை : 104

மேலே