VC யின் கவிதைகள் 01 June 06, 2015

சுடும் வெயிலினிலே முதல் முதலாய் சுகங்களைக் கேட்க
மழை வரும் பொழுதும் உந்தன் மடியில் நான் ஏங்க
இனி ஒரு பொழுதும் உயிர் பிரியா உரிமையை வாங்க
ஒரு கண நிமிடம் எனதில்லையே நீ கேட்க

கலையே இல்லா சிலை போல
கிடந்தேன் தனியே மறைவாக
எடுத்தாய் எனை நீ உனதாக
வடித்தாய் மனதை அழகாக

நான் மழைநீர் என்பது தெரியாதா ?
கடல் வானம் நீ புரியாதா ?
விழுந்தாலும் உன்னை அடைவேனே
எழுந்தாலும் வந்து தொடுவேனே

பனி விழும் காலம் இனி வரும் மாதம் மனதினில் மாற்றம் வருகிறதே
மழை தரும் மேகம் விதிமுறை மாறும் மயக்கத்திலே

கரையே இல்லா கடல் போல
கலந்தாய் எனக்குள் முழுதாக
மறந்தேன் எனை நான் மகிழ்வாக
பிறந்தேன் மறுமுறை விரைவாக

நம் உணர்வுகள் ஒன்றெனப் புரியாதா !
உடல் தான் வேறெனத் தெரியாதா !
இருந்தாலும் இன்று இணைந்தோமே
அடிவானம் வரை தொடர்வோமே

இது ஒரு மோகம் இளமையின் தாகம் விரைவினில் ஆசை தீர்வதில்லை
தவறிடும் ராகம் தொடர்ந்திடக் கூடும் நெருக்கத்திலே...

(இந்தக் கவிதையை "லாடம்" எனும் தமிழ் திரைப்படத்தில் இடம் பெற்ற "சிறு தொடுதலிலே..." என்ற பாடலின் ராக அமைப்பைத் தழுவி எழுதியுள்ளேன்.)

என்றும் அன்புடன்,
VC
(விஸ்வநாதன் சந்திரன்)

எழுதியவர் : விஸ்வநாதன் சந்திரன் (6-Jun-15, 3:33 pm)
பார்வை : 116

சிறந்த கவிதைகள்

மேலே