நல்லார்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப் போல் காணும் – மூதுரை 2
நேரிசை வெண்பா
நல்லா ரொருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மே லெழுத்துப்போற் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மே லெழுத்திற்கு நேர். 2
– மூதுரை
பொருளுரை:
நற்குணமுடைய ஒருவர்க்குச் செய்த உதவி கருங்கல்லின் மீது செதுக்கப்பட்ட எழுத்தைப் போல அழியாமல் என்றும் நிலைத்திருக்கும்.
ஆனால், நற்குணமும், அன்பும் இல்லாத மனம் உடையவர்க்கு செய்த உதவி ஓடுகின்ற நீரின் மீது எழுதப்பட்ட எழுத்திற்கு ஒப்பானது.