எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அங்கும் இங்குமாய் அலைந்து திரிந்து ஒருவழியாய் ஏற்பாடு தேவதைகளின்...

அங்கும் இங்குமாய் அலைந்து திரிந்து ஒருவழியாய் ஏற்பாடு  தேவதைகளின் திருவிழா உன் பிறந்தநாளென...🎉

நீ திண்டாட..  
நான் கொண்டாட..
என்ன வழியுண்டு,👣

ஆவாரம் பூவெடுத்து,
அல்லி பூ தொடுத்து, பச்சையம் தொலைந்த பதினாறு பூ பறித்து,
உன்னழகில் பாதியாய் 
ஒரு பூங்கொத்து...💐

அன்பை அள்ளித்தர ஆயிரம் முறையுண்டு, 
முறைகளில் முதலென்பதால் முரணின்றி முத்தமொன்று... ஆழமாய்,💋
 
கொல்லமுடியா தூரமென தொலைவாய், 
தூரமாய்... நீ

குமுறலுடன் குறுந்தகவலே முடிவென்றாதானதால் 
பிறந்தநாள் பரிசென ஓர் கவிதை உனக்காய்...🎁🎁

நாள் : 12-Dec-15, 5:20 am

மேலே