வேல்பாண்டியன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வேல்பாண்டியன்
இடம்:  இராணிப்பேட்டை
பிறந்த தேதி :  05-May-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jan-2015
பார்த்தவர்கள்:  1937
புள்ளி:  196

என்னைப் பற்றி...

என் படைப்புகள்
வேல்பாண்டியன் செய்திகள்
வேல்பாண்டியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2018 1:54 pm

பகிர்ந்துண்ணும் பண்பாடு பாசத்தின் வெளிப்பாடு
---------------------------
உள்ளதை எல்லாம் உவந்தளிக் காதிருப்பின்
எள்ளளவும் ஏற்றம் இருக்காதாம் என்றுணர்ந்து
அள்ளிக் கொடுத்து அரவணைத்தே எந்நாளும்
வள்ளல் குணங்கொண்டு வாழ்
---------------------------
கோ.வேல்பாண்டியன்

மேலும்

வேல்பாண்டியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2018 1:44 pm

வாழ்க்கையின் இனிமை
உறவில் அறியலாம்
உறவின் மேன்மையை
பிரிவில் அறியலாம்
அந்த பிரிவு என்பது
பிடிவாதத்தால் வரலாம்

கோபத்திலே சிலநாள் மூழ்கி - பெரும்
குழப்பத்திலே பலநாள் இருப்பதேனோ?
ஆசையிலே சிலநாள் திளைத்து
அழுகையிலே பலநாள் இருப்பதேனோ?
பிடிவாதத்திலே சிலநாள் இருந்து
பிரிவிலே பலநாள் தவிப்பதேனோ?

பிடிவாதத்தை விடுவோம்
பிரிவினைத் தவிர்ப்போம்
மனதினை திறப்போம்
மக்கட்பற்று போற்றுவோம்

---------------------------
கோ.வேல்பாண்டியன்

மேலும்

வேல்பாண்டியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2018 1:35 pm

அறம் செய விரும்பு
---------------------------
நல்லுள்ளம் கொண்டதால் நன்மையை செய்திட்டு
நல்லதையே நாடுவர் நன்மதியால் - நல்லவர்
செய்யும் அறத்தினால் செல்லும் இடமெல்லாம்
எய்துவர் மேன்மையை இங்கு
---------------------------
கோ.வேல்பாண்டியன்

மேலும்

அருமையான வெண்பா வேல்பாண்டியன்! வாழ்த்துக்கள். 26-Dec-2019 7:21 pm
வேல்பாண்டியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2018 1:31 pm

எழில் உருவங்கொண்டு கண்களை பறித்தாய்
தேன் இசையாக காதினுள் நுழைந்தாய்
முக்கனி தரும் சுவையினை தந்தாய்
குளிர் தென்றலாய் தேகத்தை வருடினாய்

மலர்ந்த முகத்துடன் வெட்கம் கொண்டாய்
மெல்லிய இடையுடன் மந்திர நடையிட்டாய்
வான்மழை சிந்தும் கார்மேகம் போல
செந்தமிழில் பேசி தேன்மழை பொழிந்தாய்

கூரிய விழிகளால் கைது செய்தாய்
குறுநகை புரிந்து மயங்க வைத்தாய்
கண்களில் கவிதைகளில் நீயே நிறைந்தாய்
கட்டழகு மேனியால் கவர்ந்து சென்றாய்

வான்நிலவும் பின்னால் வரும் - உன்
மான்விழிகள் சொல் கேட்டு - இதில்
நான்மட்டும் என்ன செய்வேன்? - உன்
மடியினில் என் தலை சாய்த்தேன்

உன் இதழ் சிந்தும் புன்னகை கண்டு
என் மனம் க

மேலும்

வேல்பாண்டியன் - வேல்பாண்டியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2018 10:26 pm

கார்முகிலாய் கவிதைமழை பொழியும் நல்ல
..... கவிஞர்கள் பலபேரை ஈன்றெ டுத்து
சீர்செய்யும் அறநூல்கள் நிரம்பப் பெற்று
..... தேனமுத நூல்களையும் அள்ளித் தந்து
வேர்விட்ட மரமாக மக்கள் நெஞ்சில்
..... விளையாடும் செந்தமிழே அமுதே; என்றும்
பார்போற்றும் பைந்தமிழே உன்னை நானும்
..... பணிவோடு தலைதாழ்த்தி வணங்கு கின்றேன்

ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்

மேலும்

நன்றி தோழரே 30-Jun-2018 11:17 am
அருமை தோழரே 29-Jun-2018 2:19 pm
வேல்பாண்டியன் - வேல்பாண்டியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2017 9:31 am

எல்லா நலமும்நம் எல்லார்க்கும் உய்த்திங்கு
பொல்லா பிணிகளைப் போக்கிடும் - எல்லோரும்
தம்வீட்டின் தூய்மையை பேணியே வாழ்ந்திட்டால்
தம்நாடும் தூய்மை பெறும்

(இரு விகற்ப நேரிசை வெண்பா)

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

மேலும்

நன்றி 18-Oct-2017 2:34 pm
எண்ணங்களை பொறுத்தே சமுதாயமும் உயர்வு பெரும் உள்ளங்கள் வசந்தமாகி எண்ணங்கள் தூய்மையாகி மனிதங்கள் வேராகி துன்பங்கள் இன்பமாகி வறுமையும் செழுமையாகி பெண்ணியம் கண்ணியமாகி ஆண்மையும் ஒழுக்கமாகி இனிதாய் வாழ்க்கை இனி அமைந்திட தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் 18-Oct-2017 12:54 pm
வேல்பாண்டியன் - வேல்பாண்டியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2017 9:34 am

வண்ணமிகு பட்டாடைக் கட்டிக் கொண்டு
..... மையிட்ட கண்களால் வசியம் செய்து
வண்டூரும் பூவிதழை வைத்துக் கொண்டு
..... வழியிலே வருகிற பெண்ணே; உன்னைக்
கண்டபின் மயங்கிநான் காதல் கொண்டேன்
..... கவிதைக ளிலுமதைப் பாடி வைத்தேன்
வண்ணமுறு பூக்களைக் கொண்டு செய்த
..... மாலையை சூடவே ஆசைக் கொண்டேன்

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

மேலும்

கருத்துக்கு நன்றி 18-Oct-2017 2:33 pm
வானிலையும் வசந்தமானால் வாழ்க்கையும் ஒளிமயமாகும் உள்ளங்கள் வசந்தமாகி எண்ணங்கள் தூய்மையாகி மனிதங்கள் வேராகி துன்பங்கள் இன்பமாகி வறுமையும் செழுமையாகி பெண்ணியம் கண்ணியமாகி ஆண்மையும் ஒழுக்கமாகி இனிதாய் வாழ்க்கை இனி அமைந்திட தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் 18-Oct-2017 12:55 pm
வேல்பாண்டியன் - வேல்பாண்டியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2017 9:37 am

மோகத்தால் காதல் கொண்டு
..... மூழ்கியதென் மனமே; காதல்
தாகத்தைத் கொடுத்து என்னைத்
..... தவிக்கவே விட்ட பெண்ணே
மேகம்போல் கண்ணீர் சிந்தி
..... விழிகளும் துடித்த திங்கே
சோகத்திலே துன்பம் வந்து
..... சூழ்ந்தது எந்தன் வாழ்வில்

அழியாத காதல் நெஞ்சில்
..... அளவிலாது நிறைந்தி ருக்க
விழிகளின் வழியே கண்ணீர்
..... விழுந்துநனைந் ததென் தேகம்
வழிகிற கண்ணீர் தீர்ந்து
..... வாடுகிறதென் மனமும்; வாழ்வில்
வழியுமில்லை; பிரிந்து செல்ல
..... மனமுமில்லை நானென் செய்வேன்?

மனதிலே அமர்ந்து நீயும்
..... மணியடித்தாய் அன்று; அன்பே
தினமுமே வாடும் என்னைத்
..... தேடிவ ராத தேனோ?
உனக்கெனவே நானி ருந்தேன்
..

மேலும்

கருத்துக்கு நன்றி 18-Oct-2017 2:33 pm
காத்திருப்பில் உள்ளங்கள் வாங்குகின்ற காயங்கள் மரணம் வரை அழியாத ஆறாத நினைவுகளாய் வாழ்க்கையை வழிநடாத்துகின்றது 18-Oct-2017 12:56 pm
வேல்பாண்டியன் - வேல்பாண்டியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Apr-2017 10:53 am

பார்த்த நாள்முதல் கால்களிரண்டும்
தொடருதே உன் பாதையைத்தான்
தயக்கம் ஏனடி தேன்மலரே
தவிக்கிறேன் உனைக் காணத்தான்

இரவினில் நான் விழித்திருப்பேன்
கனவினிலும் நினைத்திருப்பேன்
காதல் வந்தாலே தூக்கம் வராது
கனவு கண்டாலும் ஏக்கம் தீராது

மழையில் நனையும் பூமகளே
மனதை மயக்கும் மல்லிகை நீ
கொஞ்சி பேசிடும் தேன்மொழியே
கோடையில் வீசும் தென்றல் நீ

இதயத்தில் உனை வரைந்திருப்பேன்
இறக்கும் வரை ரசித்திருப்பேன்
கண்ணீர் வந்தாலும் கனவு அழியாது
காலம் சென்றாலும் காதல் மறையாது

மேலும்

மிக்க நன்றி 08-Apr-2017 1:34 am
உண்மைதான்..நினைவுகளின் இருப்பில் வாழ்க்கை சுகமானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Apr-2017 10:45 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
மகேஷ் முருகையன்

மகேஷ் முருகையன்

தஞ்சை மற்றும் சென்னை
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (25)

இவரை பின்தொடர்பவர்கள் (26)

மேலே