பிடிவாதம்

வாழ்க்கையின் இனிமை
உறவில் அறியலாம்
உறவின் மேன்மையை
பிரிவில் அறியலாம்
அந்த பிரிவு என்பது
பிடிவாதத்தால் வரலாம்

கோபத்திலே சிலநாள் மூழ்கி - பெரும்
குழப்பத்திலே பலநாள் இருப்பதேனோ?
ஆசையிலே சிலநாள் திளைத்து
அழுகையிலே பலநாள் இருப்பதேனோ?
பிடிவாதத்திலே சிலநாள் இருந்து
பிரிவிலே பலநாள் தவிப்பதேனோ?

பிடிவாதத்தை விடுவோம்
பிரிவினைத் தவிர்ப்போம்
மனதினை திறப்போம்
மக்கட்பற்று போற்றுவோம்

---------------------------
கோ.வேல்பாண்டியன்

எழுதியவர் : கோ.வேல்பாண்டியன் (9-Sep-18, 1:44 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 146

மேலே