வாழிய செந்தமிழ்
கார்முகிலாய் கவிதைமழை பொழியும் நல்ல
..... கவிஞர்கள் பலபேரை ஈன்றெ டுத்து
சீர்செய்யும் அறநூல்கள் நிரம்பப் பெற்று
..... தேனமுத நூல்களையும் அள்ளித் தந்து
வேர்விட்ட மரமாக மக்கள் நெஞ்சில்
..... விளையாடும் செந்தமிழே அமுதே; என்றும்
பார்போற்றும் பைந்தமிழே உன்னை நானும்
..... பணிவோடு தலைதாழ்த்தி வணங்கு கின்றேன்
ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்