அடங்காத்தமிழ்

ஆறாம் வயதிலென் விரலேந்திய ,
எழுதுகோல் கற்றது வேற்றுமொழிகளைத்தான்
ஆனாலும் அம்மொழியாழியுள் தேடினேன்
முத்தும் பளக்கும் பவிழவும் தான்.
ஆற்றல் மிகும் அம்மொழிகளில் தான்,
மூவுலகும் அடங்கும் என்றெண்ணி விட்டேன்

சிந்தைகள் என்னுள்ளில் பொங்கிப்பெருகவே ,
சத்தம் எழுப்ப மறுத்ததே என் மனம்.
மையும் கோலும் இருந்த பின்னும்,
மனதிற்கு மௌனத்தாழ் போட்டு விட்டேன் .

காவிரி தேடி அலைந்த சோழன் போல்
என் மனம் சென்றதே செம்மொழியெ நோக்கி
அம்மொழி செம்மொழி அமுதமென்றார் பலர்
அடங்காமொழி என்று சொன்னதுண்டோ ?

கல்லும் இனிக்கும் இம்மொழியெ சுமக்கையில் ,
காலமும் கையேந்தி நின்று விடும்
அழிவில்லை தாயே உம்மொழிக்கென்றுமே
அணைத்து கல்வெட்டுகள் அழிந்தீடிலும்
அகண்ட காவேரியை அடக்கி வைக்க
ஆகுமோ மானுடம் நினைத்து விட்டால்?

எழுதியவர் : சந்தியா (25-Jun-18, 10:38 am)
சேர்த்தது : சந்தியா
பார்வை : 357

மேலே