இதயம் அதில் உதயம்

பார்த்த நாள்முதல் கால்களிரண்டும்
தொடருதே உன் பாதையைத்தான்
தயக்கம் ஏனடி தேன்மலரே
தவிக்கிறேன் உனைக் காணத்தான்

இரவினில் நான் விழித்திருப்பேன்
கனவினிலும் நினைத்திருப்பேன்
காதல் வந்தாலே தூக்கம் வராது
கனவு கண்டாலும் ஏக்கம் தீராது

மழையில் நனையும் பூமகளே
மனதை மயக்கும் மல்லிகை நீ
கொஞ்சி பேசிடும் தேன்மொழியே
கோடையில் வீசும் தென்றல் நீ

இதயத்தில் உனை வரைந்திருப்பேன்
இறக்கும் வரை ரசித்திருப்பேன்
கண்ணீர் வந்தாலும் கனவு அழியாது
காலம் சென்றாலும் காதல் மறையாது

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (7-Apr-17, 10:53 am)
பார்வை : 206

மேலே