மாலை சூடஅவா
வண்ணமிகு பட்டாடைக் கட்டிக் கொண்டு
..... மையிட்ட கண்களால் வசியம் செய்து
வண்டூரும் பூவிதழை வைத்துக் கொண்டு
..... வழியிலே வருகிற பெண்ணே; உன்னைக்
கண்டபின் மயங்கிநான் காதல் கொண்டேன்
..... கவிதைக ளிலுமதைப் பாடி வைத்தேன்
வண்ணமுறு பூக்களைக் கொண்டு செய்த
..... மாலையை சூடவே ஆசைக் கொண்டேன்
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்