எழில் ஊர்

அசையா நெற்குழை வயலும்;வயலுக் குழைக்கும் வாய்க்காலும்
வாய்க்கால் கொஞ்சும் நீரும்;நீர் கொழுத்த கண்மாயும்
கண்மாய் உறங்கும் நீர் மலரும்;மலர் மயக்கும் தேன் வண்டும்
வண்டு குழுமும் பூக்காடும்;காடு ஈன்ற மென்காற்றும்
காற்றில் கரையும் முகிலும்;முகில் தொடுக்கும் மழையும்
மழை கொடுக்கும் மகிழ்மனமும்;மனதில் ஈரவீரம் உடை மக்களும்
அம்மக்களைப் பெற்ற எம்மூரும்;அவ்வூரைப் பெற்ற தமிழ்நாடும் அவனியில் உயர்ந்ததுவே..!

எழுதியவர் : செல்வா. மு(தமிழ் குமரன்) (4-Apr-16, 7:52 pm)
Tanglish : ezil oor
பார்வை : 109

மேலே