அந்த மரம்

அந்த மரம்
எனக்கு பழங்களைத் தந்தது
குயிலுக்கு கிளையைத் தந்தது-

பழங்களை உண்ட
என்னிடமிருந்து
கழிவு வெளியானது

கிளையைக் கொண்ட
குயிலிடமிருந்து
இதமான கானம் வந்து படர்ந்தது

எழுதியவர் : ரோச்சிஷ்மான் (4-Apr-16, 5:35 pm)
Tanglish : antha maram
பார்வை : 69

மேலே