எனக்கொரு வரம் வேண்டும்

எனக்கொரு வரம் வேண்டும்
தினசரி அது வேண்டும்
ஐயோ என நினைப்பவை எல்லாம்
மாற்றிட திறம் வேண்டும்

எனக்கொரு வரம் வேண்டும்
சுயநலம் இல்லா மனம் வேண்டும்
பொதுவாய் நடக்கும் தீயதை
அடக்கிட என்னால் முடிய வேண்டும்

எனக்கொரு வரம் வேண்டும்
உழைப்பவர் உரிமை கெடாமல்
காத்திட எனக்கு உழைப்பினை
தர வேண்டும் ..........

எனக்கொரு வரம் வேண்டும்
என் அன்னை தமிழ் பாரெங்கும்
புழங்கிடும் நிலை வேண்டும்
நிரந்திரமாய் நிலை வேண்டும்

எனக்கொரு வரம் வேண்டும்
இன்னும் இன்னும் ஆயிரம் கேட்டிட
இந்த கவிதை பக்கம்
தொடர்ந்து இன்னும் நீள வேண்டும்

எழுதியவர் : ருத்ரன் (5-Apr-16, 12:11 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 83

புதிய படைப்புகள்

மேலே