சொல்லாதே செய்
உறக்கத்தை கையில் ஏந்திக் கொண்டு நடந்தேன் இரவில்.
ஒரு பேரொலி காதுகளின் கடைசி வரை பாய்ந்தது.
திசை நோக்கி எண்ணத்தைச் செலுத்திப் போனேன்.
இருளின் திடலில் இம்சிப்பின் மாநாடு நடந்து கொண்டிருந்தது.
தலைமையேற்று உரை வீசிக் கொண்டிருந்தாய் நீ.
அமைதியை கொடுப்போம்;அரவணைத்து நடப்போம் என்று
சூளுரைத்துப் பேசுகிறாய்.
எனக்கு தோன்றுகிறது அப்போது அங்கே
மனதுள்ளே இப்படி-சொல்லோடு நிறுத்தாதே;செய்யடீ என்று.