நித்திரை யைக்கலைத்தல் நித்தம் பொழுதுபோக்கோ

சித்திரம்போல் பேசிடும் செவ்வரிப் பூவிழியே
புத்தகம் போல்விரியும் புன்னகைச் செவ்விதழே
நித்திரை யைக்கலைத்தல் நித்தம் பொழுதுபோக்கோ
முத்திரைப்ப சும்செம்பொன் னே

எழுதியவர் : கவின் சாரலன் (13-Oct-23, 8:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே