காட்சிப் பிழைகள் -22

1.காதல் போர்க்களத்தில் இஸ்ரேல் இராணுவத்தின்
பீராங்கிக் கனை நீ என்பதால் உன்னை வெல்ல
விரும்பாமல் பலஸ்தீன் நாட்டு போராளியாகிறேன்.
******
2.ஆசையாய் நான் வளர்த்த தோட்டமும் காதலை போல்
ஏமாற்றியது.பூக்களை கேட்டால் இலைகளை தருகிறது.
******
3.என் உடைந்த புல்லாங்குழலை வாங்கி பலர்
கவிஞர்களாகிவிட்டார்கள்.நான் வாய் வைத்து
வாசித்தால் உன் தூக்கம்கெட்டு விடுமோ என்ற
ஐயத்தில் இன்று வரை காதலனாகவே வாழ்கின்றேன்.
******
4.என்னவள் நினைவுகளை கனவில் கடன் வாங்க மறுக்கிறேன்.
காதல் கொடுக்கல் வாங்கலில் வட்டி செலுத்த கண்ணீரில்லை.
******
5.நீ எவனை வேண்டுமானாலும் விருப்பத்தோடு மனமுடித்துக்கொள்
உனக்கு பிரவசம் பார்க்கும் வைத்தியன் நானாகத்தான் இருப்பேன்
உன் கருவுக்குள் வாழ்ந்த என் தத்துப்பிள்ளையை ஒருமுறை முத்தமிட
*******
6.காதலின் சின்னமென தாஜ்மஹால் கண்டு வியந்து போனாய்.
என் இதயத்தில் கனவுகளால் அடித்தளமிட்டு என்புகள் எனும் தூணால்
உயிரை கூரையாக்கி உதிரத்தை வண்ணமாக பூசிய கோபுரம் கண்டால்
என் நெஞ்சில் தலை வைத்து தூங்கிய வாழ்நாள் முடிப்பாய்.
******
7.காதல் தோல்வி எனும் புத்தகம் தினந்தினம் புரட்டப்படுகிறது.
ஆனால் எழுதுகின்ற கைகள் தான் நொடிக்குநொடி வேறுபடுகிறது,
******
8.அவள் பாதம் பட்ட தேசத்தில் குமுறும் எரிமலைகள் கிடையாது.
அவளுக்காய் பாடும் கீதத்தால் மூங்கில் காடுகளும் என் மேல்
தீப்பற்றிக் கொண்டது,
******
9.இரவின் மெத்தையில் அவள் தூங்க தேவதைகள் காவற்காப்பதால்
அவள் இதய மெல்லிசை என் நரம்பின் அலைவரிசையை தோடாமல்
தாழிடப்படுகிறது.
******
10.சுவாச நாடி நாளங்கள் ஓய்வெடுத்த பின் உன் தேகத்திற்கு கொள்ளி
வைக்கும் முன் அவ்விடத்தில் என் சடலம் புதைக்கப்பட்டிருக்கும்.
******
11.உன்னை காதலி என்ற சொல்லால் அழைத்த தருணங்களை விட
மறு உலகம் சென்ற என் தாயின் பெயரைச் சொல்லி அழைத்தது
தான் அதிகம்.நீ என் இரண்டாம் தாயா?இல்லை முதல் குழந்தையா?
*******
12.நீ உண்ட எச்சிலையில் மீதமிருக்கும் உணவை உண்ணுகிறேன்.
என் கை பட்டதால் தொண்டை வழியே இரைப்பைக்குள் நஞ்சாய் நுழைகிறது.
******
13.கல்லால் வேண்டுமானாலும் ஆசைதீர என்னை தாக்கி விடு
உன்னை வருத்தும் செயலால் என் இதயத்திற்கு சாட்டையால் அடிக்காதே!
******
14.நான் தந்த பரிசுப்பொருட்களை தூரம் வைத்து நீ விலகிச்சென்றாலும்
உன் கொலுசின் தவறிவிழுந்த மணியின் ஓசை கேட்டு அருகில் வருகிறேன்.
நேற்றைய கனவில் நீ வீசிய முட்கள் மலராக பூத்திருக்கும் அதிசயம் சொல்வதற்காய்
******
15.தவறி விழுந்து நொறுங்கிய கண்ணாடி குவளைக்கு கைகள் செய்த பிழை
இதயம் உடைந்து நினைவுகள் சிதறி தீப்பற்றும் நரம்புகள் காதலின் காட்சிப்பிழை
*******
16.காதலால் கண்களை கட்டி ஒரு கண்ணாம்பூச்சிஆடுகிறேன்.
சில பட்டாம்பூச்சிகள் பட்டாளத்தில் ஒரு பட்டாம்பூச்சி இதயம் தூக்கி பறக்கிறது,
******

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (2-Jan-16, 1:10 am)
பார்வை : 817

மேலே