பார்வை மொழி
கதிரும் வெள்ளை நிலவும் - உரையாடும்
மொழியும் என்ன மொழியோ
மேகம் வெள்ளை மேகம் – கலந்திடவே
பேசும் மொழியும் என்னவோ
பூக்களும் தேனை உறிஞ்சி குடிக்க
வண்டை அழைக்கும் மொழியும் என்ன மொழியோ
குழலும் காற்றும் – இசைக்க
பேசும் மொழியும் என்ன மொழியோ
என்ன மொழியோ...
தமிழில் பிறந்த மற்ற மொழி போல் – அவையெல்லாம்
பெண் விழி மொழியில் பிறந்த மொழியோ....
அழகு பார்வை மொழிக்கு
அகராதி எழுதிடவே
அறிஞர் யாரும் இன்னும்
பிறக்கவில்லை
பாவை பார்வை மொழி – தரும்
மனதில் இன்ப வலி – அது
தேக தீண்டல் விட இனிதானது
நிலையான இலக்கணம்
எழுதா விழி மொழியில்
நித்தம் நூறாயிரம்
இலக்கியம் தோன்றுதே
விழி மொழியை கற்றிடவே
அழகான கண் பார்த்தேன் - என்
இமை துடிக்கும் நேரம் கூட
ஒரு யுகமானதே
அரு கயிற்று ஊசல் போல்
என் இதயம்
பெண் விழி கிணற்றின் மேல் ஆடுதே