இவள் நிலா

எட்டித்தொட நினைத்தேன்.. தொட்டு விட முடியாத தூரத்தில் நீ..

உன் கதிர்களால் சுட்டெரித்தாலும்
உன்னை தொட முயற்சி செய்வது
கூட ஒரு நிம்மதி எனக்கு..!!

உன் தாமரைக் காதலி
எப்படி இருக்கின்றாள்??
அவளுக்கென்ன
உன் கதிர்களால் நீ
காதற் கதை பேச..
சிரித்து கொண்டிருப்பாள்..!!

நானோ உன் நினைவால் நொந்து
தேய்ந்து. . கொண்டிருக்கிறேன்..
தனியாக இருந்து
பனியாக அழுகிறேன்..!!

உன் மீது பிழையில்லை
நான் ஏழை நிலவல்லவா??
அதுதான் உனக்கு என்
வழி மறந்து விட்டது


இவள் நிலா

எழுதியவர் : இவள் நிலா (1-Jan-16, 9:39 pm)
Tanglish : ival nila
பார்வை : 180

மேலே