பார்வையின் அர்த்தம்

ஒரு பார்வை பார்த்தால்
கண்கள் கதை பேசிடுமா ?

கண்கள் பேசும் மொழி
புரியாவிடில் பார்வையின்
அர்த்தம் காதலாகுமா ?

ஓரக் கண் பார்வையில்
வில்லங்கம் இருக்குமா ?

ஒரு நொடிக்கு
பல தடவை திரும்பிப்
பார்த்ததன் அர்த்தம்
விளங்குமா ?

விளங்காவிடில் அவன்
என்னைப் பார்க்கையில்
நானும் ஏன் பார்க்கிறேன் ?

என் பார்வையின் அர்த்தம்
அவனுக்கு புரிகிறதா ?

நான் ஒழிந்து பார்ப்பதும்
அவன் எட்டிப் பார்ப்பதும்
கண்ணாம்பூச்சு விளையாட்டா ?

விளையாட்டெனின்,
பார்வையின் விளையாட்டு
வினையாகுமா ?

எழுதியவர் : fasrina (10-Aug-15, 2:54 pm)
Tanglish : parvaiyin artham
பார்வை : 334

மேலே