வைத்தியர்

கருணை உருவம்
உயிரை காக்கும் தெய்வம்
உலகில் உன்னத தொழில்
வகிக்கும் வைத்தியர்
காய்ச்சல் அனலாய்
சுடுகையில் மருந்தை
தந்து தலை தடவும்
தந்தை
உலகில் உயர்வாய்
வைத்தியர் எம்
நெஞ்சில் மிளிர்வது
அவர் நற்குணங்களாலே ....
நற்குணமில்லா வைத்தியரும்
உலகில் இருப்பாரோ !
இருக்கும் என்கிறது
சில மருத்துவமனைகள்