நடமாடும் நதிகள் = 45

1
ஈரடி கனிமொழி
ஈராயிரமாண்டு செம்மொழி
மானுடத்தின் வழிமொழி – திருக்குறள்! 1
2
பாட்டாளியை கூட்டாளியாக்க
பைத்தியக்காரனா நான்…?
சத்தியம் செய்கிறான் – முதலாளி..!
3
பகுத்துண்ணும் பறவையா..?
செத்துகிடப்பதை தனியாய் தின்ன
ரவுடியாகிறது - அண்டம்காக்கை…!
4
தாலிக்கு தங்கம்
தாலியறுக்கும் சுமங்கலிகள்
தமிழக அரசு – டாஸ்மாக்..!
5
அரசு இலவசங்களுக்கு
கியாரண்டி இல்லை; - ஆனாலும்
வரிந்துக்கட்டும் – ஜனங்கள்.!

6
வெளிநாட்டவருக்கு அழைப்பு
வேலைவாய்ப்பகத்தில் கூட்டம்
ஆடு மேய்த்தாலும் – அரசு பணி..!
7
ஏமாந்தால் ஏறி மிதி
எதிர்த்தால் லத்தி அடி
உங்கள் நண்பனாம் – போலீஸ்…!
8
வக்காளத்து வாங்கும் வக்கீல்
வாய்தா கொடுக்கும் நீதிபதி
போதுமடா சாமி – நிரபராதி..!
9
அவசர ஊர்திகளில் அலறும் ஹாரன்கள்
அமரர் ஊர்திகளாய் மாறும் அவலங்கள்
அடர்ந்த நெரிசலில் - இந்திய நகரங்கள்..!
10
வாகனங்களுக்கு வாழ்நாள் சாலைவரி
சீரமைக்காத சாலைகளில் வாகனங்கள்
சீர்தூக்கிப்பார்க்காத – ஆர் டி ஓ..!

*******************************************************************************************
நன்றியுடையவனாகின்றேன் நால்வர் அணிக்கு….!

வாய்ப்பளித்த ஜின்னா
ஒருங்கிணைத்த முரளி
படமளித்த கமல்காளிதாஸ்
பெயர் பதித்த ஆண்டன் பென்னி

மனமார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்

படைப்புகளை பதிவிடும் படைப்பாளிகளுக்கும்
படித்து கருத்திடும் எழுத்து தள தோழர்களுக்கும்
எழுத்தாளார்களை ஊக்குவிக்கும் எழுத்து வலைதளத்திற்கும்

என்றும் உங்கள் ஆதரவோடு
சாய்மாறன்
9841322135

எழுதியவர் : (21-Mar-16, 6:24 am)
பார்வை : 334

மேலே