கலங்காதே தேவதையே

அவள் யாரோ !
சாலையோரம் குடை பிடித்து
நிற்கும் தேவதை யாரோ !

அவள் கண்களில் ஏன்
கவலை
அவள் மதிமுகம் ஏன்
வாட்டம்

என் தேவதையே ! கலங்காதே
என் ஆத்மா இறக்கவில்லை

என் தேவதையை தேடி
அந்த பாதையோரம்
பல நாள் தவமிருந்தேன்

இறுதியில் கண்டு கொண்டேன்
நான் உன்னை முதல் முறை
கண்ட தோரணையில்

எங்கே உன் குறும்புப் பார்வை
எங்கே உன் இதழோர புன்னகை
எவையுமில்லை

என் புகைப்படம் ஏந்தி
கண்ணீர் சொரிகிறாய்

என் கைகள் அவள்
தலை தடவி ஆறுதல்
சொல்ல எத்தனிக்க

ஐயோ ! முடியாதே
இது உடலில்லை ஆத்மா
உணர வேதனையடைகிறேன்

எழுதியவர் : fasrina (1-Feb-16, 8:57 pm)
சேர்த்தது : fasrina
பார்வை : 125

சிறந்த கவிதைகள்

மேலே