இதயம் எங்கோ

இதயம் எங்கோ
பொன்னெழில் சிந்திடும் புன்னகையாள்
கன்னங்குழிகளில் கள்- நகையாள்
கண்ணெழில் பார்வை அம்புகளாய்
கனியிதழ்களின் ஓரம் வம்புகளாய்!
விண்ணெழில் மின்னும் நட்சத்திரமாய்
என்னிதய வானில் முழுநிலவாய்
அமுதினும் அமுதாய் சொல் வடித்திடுவாள்
அதைப் பொழுதினும் சுவைத்திட கடிந்திடுவாள்
ஜதிகள் பிறந்திட வலம்வருவாள்
நதிகளின் நீராய் இனித்திடுவாள்
இதயம் எங்கோ தொலைந்த தென்பாள்
இருக்குமிடம் உமக்கு தெரியுமென்பாள்
காதலைச் சொல்லிட தயங்கிடுவாள்
கனியிதழை மெல்ல கடித்திடுவாள்
வேதனை தாளாது பிதற்றிடுவாள்
காதலின் நோயினை பற்றிட்டாள்!
---- கே. அசோகன்.