நான் வியர்த்துப்போன நிமிடம்

அவள் அழகிதான்.....
..................................................

ஒரு கோடி நட்சத்திரங்களுக்குள்
ஒரு நிலவைக்கண்டேன் .
வியர்வை பூத்தது இதயத்தில்,
மின்னல் கீற்றாய் தோன்றி மறைந்தால்

அப்போதுதான் ,,,,

காதல் பற்றிய உணர்வுகள்
மெல்ல மெல்ல எழுந்து நடக்க
ஆரம்பித்தது என்னுள்ளே...

வெள்ளையும் கருப்பும் வேறு வேறுதான்
காதல் ஒன்றுதானே ;
தனிமையோடு பேச ஆரம்பித்தது மனசு.

அடுத்த திருவிழா வருவதற்குள்
ஆலமரத்தடி என் விலாசமாய் போனது நண்பர்களுக்கு.
அழகியவள் அடுத்த வருகைக்காய்
ஒரு வருடம் சுருங்கிப்போனது
என் காத்திருப்புக்கு மத்தியில்.

உண்மை நிகழ்வு ...

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (31-May-15, 4:06 pm)
பார்வை : 128

மேலே